/* */

'கோல்டன் குளோப்' விருது பெற்ற ஆர். ஆர். ஆர். பட குழுவினருக்கு மோடி பாராட்டு

'கோல்டன் குளோப்' விருது பெற்ற ஆர். ஆர். ஆர். பட குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

கோல்டன் குளோப் விருது பெற்ற ஆர். ஆர். ஆர். பட குழுவினருக்கு மோடி பாராட்டு
X

நாட்டு... நாட்டு பாடலுக்காக ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றுள்ள ஆர். ஆ.ர் ஆர். படத்தில் ஒரு காட்சி.

RRR's Naatu Naatu wins Golden Globe for best original songதான் இயக்கிய பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார் இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டுமே இருந்துவந்த இவரது திறமை பாகுபலி படத்திற்கு பின்னர் அனைத்து மொழி படங்களுக்கும் பரவியது. ராஜமௌலி இயக்கத்தில் கீரவாணி இசையமைப்பில் ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண் ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி ஒன் இந்தியா படமாக இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகி இதுவரை ரூ. 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் ஆர். ஆர்.ஆர்.

RRR's Naatu Naatu wins Golden Globe for best original songட்ரிபிள் ஆர் எனப்படும் இந்த படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் நேரடியாக களம் இறங்கி உள்ளது. இதனிடையே ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான கோல்டன் குளோப் விருதுகளுக்காக ஆர். ஆர்.ஆர். படம் இரண்டு பிரிவுகளில் நாமினேஷன் ஆனது.

கோல்டன் குளோப் விருதுடன் இசையப்பாளர் கீரவாணி.

RRR's Naatu Naatu wins Golden Globe for best original songஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான (நாட்டு நாட்டு) நாமினேஷனிலும் பங்கேற்றது. இந்நிலையில் கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது. இதில் நாட்டு... நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் வென்று உள்ளது. விருதை பெற்ற பின்னர் பேசிய கீரவாணி இந்த விருதுக்கு நன்றி எல்லோரும் சொல்வது போன்று இந்த விருது எனக்கானது அல்ல. எனது சகோதரரும் இந்த பட இயக்குனருமான ராஜமௌலிக்குரியது என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை ஆதரவுக்கு நன்றி மற்றும் பிரேம் ரஞ்சித், காலபைரவா, சந்திரபோஸ், ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்க அனைவருக்கும் நன்றி என்றார். இதனையடுத்து பட குழுவினரும் தெலுங்கு திரை உலகத்தினரும் உலகத்தினரும் மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

RRR's Naatu Naatu wins Golden Globe for best original songசினிமா உலகத்தினரின் பாராட்டை மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியின் போராட்டத்தையும் ஆர். ஆர்.ஆர். படம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் சாதனை புரிந்த ஆர். ஆர். குழுவை வாழ்த்துகிறேன். இந்த சிறப்புக்குரிய கவுரவம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்துள்ளது என்று கூறியுள்ளார்.'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக ஏற்கனவே கோல்டன் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ .ஆர்.ரகுமான், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான் ,ஆர். ஆர்.ஆர்.பட நாயகர்களில் ஒருவரான ராம்சரணின் தந்தையும், தெலுங்கு நடிகருமான சிரஞ்சீவி, ஆர். ஆர்.ஆர். படத்தில் ராம்சரண் தந்தையாக நடித்த இந்தி நடிகர் அஜய் தேவகன் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ஆர் .ஆர்.,ஆர் பட குழுவினர் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி வெளியிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 Jan 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...