/* */

கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் கமல் படம்! அடடே!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் தற்போது கொரியன் மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது.

HIGHLIGHTS

கொரியன் மொழியில் ரீமேக் ஆகும் கமல் படம்! அடடே!
X

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் தற்போது கொரியன் மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்திய சினிமாவின் ஜாம்பவான் என்றால் அது கமல்ஹாசன்தான். சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலர் பல மொழிகளிலும் இருந்தாலும் கலையை நேசித்து அதற்காக உயிரைக் கொடுத்து பல உன்னத படைப்புகளைக் கொடுத்து இந்திய சினிமாவின் பிரதிநிதியாக உலகம் முழுக்க அறியப்படும் கதாநாயகன் நம் உலகநாயகன்தான்.

கமல்ஹாசன் இப்போதும் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மற்ற மொழிகளில் வந்த படங்களில் நல்ல கதைகள் இருந்தாலும் அவற்றை தேர்ந்தெடுத்து தமிழிலும் இயக்க முன்வருபவர் கமல்ஹாசன். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் வெளியான திருஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். அந்த படத்தில் மோகன்லால் ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதே மாதிரியான கதாபாத்திரத்தில் இங்கு சுயம்பு லிங்கமாக நடித்திருந்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் ஜோடியாக அவரது மனைவியாக கௌதமி நடித்திருப்பார். கமல்ஹாசனின் மகள்களாக நிவேதா தாமஸ் எஸ்தர் அணில் ஆகியோர் நடித்திருப்பர். 2015ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரிஜினலை விட நல்ல விமர்சனத்தைப் பெற்றது பாபநாசம்.

தமிழில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஹிட் ஆனது இந்த படம். அதன்பிறகு இந்த படத்தை ஹாலிவுட்டிலும் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கொரியன் மொழியிலும் இந்த படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்களாம்.

பனோரமா ஸ்டூடியோஸ் மற்றும் வார்னர் ப்ரோஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தை கொரியன், ஆங்கிலம் மட்டுமின்றி இன்னும் பல மொழிகளில் உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

Updated On: 22 May 2023 8:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  2. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  5. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  6. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  7. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்