/* */

தீபாவளி திருநாளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன?

தீபாவளி திருநாளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

தீபாவளி திருநாளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன?
X

தீபாவளி கொண்டாட்டம் பைல் படம்.

உலகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் முதன்மையான பண்டிகையாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடுர்கள். அந்த வகையில் நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி விட்டார்கள்.

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு வகைகள் தான் முக்கிய இடம் பிடித்தாலும். காலையில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிய பின்னர் சற்று ஓய்வாக அமர்வார்கள். அந்த ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சியை திருப்பினால் என்ன சிறப்பு நிகழ்ச்சி இருக்கிறது என்பதைப் பார்க்க எல்லோருக்கும் ஒரு ஆர்வம் ஏற்படும்.அந்த வகையில் அனைத்து தொலைக்காட்சிகளுமே தீபாவளி தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. பட்டிமன்றம் கலை நிகழ்ச்சிகள் நடிகர் நடிகைகள் பேட்டி என இருந்தாலும் திரைப்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அந்த வகையில் நாளை தொலைக்காட்சிகளில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை பார்ப்போமா?

சன் டிவி

காலை 11 மணிக்கு டாக்டர் திரைப்படம் -சிவகார்த்திகேயன்- பிரியங்கா மோகன் நடித்த படம்.

மதியம் 2 மணி- நடிகர் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம்.

மாலை 6:30 மணி நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம்.

இரவு 11 மணி பிரசாந்த்- கிரண் நடித்த வின்னர் திரைப்படம்.

கே டிவி

காலை 7 மணி- நான் ஈ திரைப்படம் -நானி சுதீப் சமந்தா நடித்த படம்.

காலை 10 மணி- பன்னிக்குட்டி- நடிப்பு -யோகி பாபு- மாலினி. மதியம் 1 மணி- வைகுண்டபுரம் -அல்லு அர்ஜுன் பூஜா நடித்த படம். மாலை 4 மணி விஷால் நடித்த பாயும்புலி திரைப்படம்.

இரவு 7 மணி -ராஜ வம்சம் நடிகர் சசிகுமார் நடித்த படம். இரவு 10.30 மணி -எல்லாமே இப்படித்தான் -சந்தானம்- அகிலா நடித்த திரைப்படம்.

கலைஞர் தொலைக்காட்சி

மதியம் 1.30 மணி- டான்- திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் +பிரியங்கா மோகன் நடித்தது.

இரவு 11:30 மணி பாஸ் என்கிற பாஸ்கரன் -ஆர்யா, நயன்தாரா நடித்த படம்.

ஜெயா டிவி

மதியம் 1:30 மணி வேலாயுதம் திரைப்படம் -விஜய் அஹன்சிகா நடித்த படம்.

மாலை 10.30 மணி- பிரபாஸ் ராணா, அனுஷ்கா நடித்த பாகுபலி திரைப்படம்.

இரவு 10.30 மணி நடிகர் விஜய் நடித்த சிவகாசி திரைப்படம்.

ஜே மூவி

காலை 10 மணி வீரசிவாஜி திரைப்படம் -விக்ரம், பிரபு நடித்த படம்.

1 மணி சூர்யா நடித்த மாற்றான் திரைப்படம்.

4மணி ஆஞ்சநேயா திரைப்படம்- அஜித், மீரா ஜாஸ்மின் நடித்த படம்.

இரவு 7 மணி உழவன் மகன்- விஜயகாந்த், ராதிகா நடித்தது.

இரவு 10 மணி- எம். ஜி. ஆர். வாணிஸ்ரீ நடித்த தலைவன் திரைப்படம்.

ராஜ் டிவி

மதியம் 12 மணி- ஏ.ஜி.பி. லட்சுமி மேனன் நடித்த படம்

மாலை 4:30 மணி ராஜாவும் ஐந்து பூஜாவும் -அர்வி, இமான் அண்ணாச்சி நடித்த படம்.

இரவு 8.30 மணி முகமறியான்- கிரண் குமார், காயத்ரி ஐயர் நடித்த படம்.

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 6.30 மணி- விக்ரம் ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் திரைப்படம்.

காலை 9.30 மணி -ஹரி குமார் கார்த்திகா நடித்த தூத்துக்குடி திரைப்படம்.

மதியம் 12:30 மணி- விமல் நந்திதா நடித்த அஞ்சல திரைப்படம்.

மாலை 3:30 மணி கணேஷ் வெங்கட்ராமன் நடித்த அட்சரம் திரைப்படம்.

மாலை 6.30 மணி -ரஜினி, மீனா, ரோஜா நடித்த வீரா திரைப்படம்.

இரவு 9.30 மணி -கமல், ஜோதிகா நடித்த தெனாலி திரைப்படம்.

விஜய் டிவி

மாலை 5.30 மணி- கமல், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படம்.

வசந்த் டிவி

காலை 10 மணி நெடுநல்வாடை -பூ ராமு அஞ்சலி நாயர் நடித்த படம்.

ஜீ தமிழ்

காலை 11 மணி ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கேப்டன் திரைப்படம்.

மாலை 5.30 மணி கே. ஜி. எஃப் 2 -திரைப்படம்- யாஷ் ஸ்ரீநிதி செட்டி நடித்த படம்.

மெகா டிவி

மதியம் 1.30 மணி- விஜயகாந்த், கஸ்தூரி நடித்த எங்க முதலாளி திரைப்படம்

பாலிமர் டிவி

காலை 10 மணி -மைக்கேல் மதன காமராஜன்- கமல் குஷ்பூ நடித்த படம்

மதியம் ரெண்டு

2மணி நறுவை திரைப்படம் செல்லா அனாமிகா நடித்த படம்.

மாலை 6:00 மணி -ஆசா சரத் நடித்த தெளிவு திரைப்படம்.

இரவு 11 மணி சுமந்த் காஜல் அகர்வால் நடித்த ஓ திரைப்படம்.

தமிழன் டிவி

காலை 11 மணி- மெகா சார்க்- ஆங்கில படம் தமிழில்.

ரெட் குயின் பார்ட்- 5 ஆங்கில படம் தமிழில்.

Updated On: 23 Oct 2022 11:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்