/* */

Captain miller ரிலீஸ் தேதியில் மாற்றம்! ஏமாற்றத்தில் தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Captain miller ரிலீஸ் தேதியில் மாற்றம்! ஏமாற்றத்தில் தனுஷ் ரசிகர்கள்!
X

தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படமான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளிப்போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக வரலாற்று படமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என்று முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படியே தனுஷும் இன்று பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத காரணங்கலால் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. வாத்தி படத்தைத் தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி வருகிறார். விரைவில் படப்பிடிப்பு முடியும் என்று கூறப்பட்டாலும், இன்னும் பல காட்சிகள் படமாக்கப்படவேண்டும் என்று கூறப்படுகிறது.

தீபாவளி விருந்தாக இந்த படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் வேற லெவலுக்கு உருவாகி வருகிறது.

பக்ரீத் தினத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 26 Jun 2023 2:31 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?