/* */

நடிகை 'ஆலியா பட்' மீது நெட்டிஷன்களுக்கு என்ன கோபம்..? ட்ரெண்டாகும் #BoycottAliaBhatt..!

BoycottAliaBhatt-நடிகை ஆலியா பட் ஆண்களுக்கெதிரான கருத்துக்களை படத்தில் கூறுவதன் மூலம் குடும்ப வன்முறையை தூண்டுகிறார் என்று நெட்டிஷன்கள் கொதித்துள்ளனர்.

HIGHLIGHTS

நடிகை ஆலியா பட் மீது நெட்டிஷன்களுக்கு என்ன கோபம்..? ட்ரெண்டாகும் #BoycottAliaBhatt..!
X

BoycottAliaBhatt-நடிகை ஆலியா பட்.

BoycottAliaBhatt-'டார்லிங்' படத்தில் நடிகை ஆலியா பட் ஆண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியிருப்பதாக நெட்டிசன்கள் கடுப்பாகி குடும்ப வன்முறையை தூண்டுகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆலியா பட் தனது அடுத்த நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான 'டார்லிங்' -ஐ விளம்பரப்படுத்த சமூக ஊடகங்களில் பிஸியாக இருந்துவருகிறார். நாளை அந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் படம் வெளியாகும் முன்னரே அந்த படத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தற்போது ஆலியாவுக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பு கொஞ்சம் வித்தியாசமானதாகவே உள்ளது. டார்லிங் படத்தில் ஆலியா பட் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை தூண்டுவது போல உள்ளதாக சிக்கல் கிளம்பியுள்ளது.

'டார்லிங்' திரைப்படத்தின் டீஸரில் ஆலியாவின் கதாபாத்திரம் தன் கணவனை ஒரு பாத்திரத்தில் அடிப்பது, முகத்தில் தண்ணீரை ஊற்றுவது, முகத்தை தண்ணீரில் மூழ்க வைப்பது, போன்ற கொலை முயற்சி செய்வதுபோல காட்சிகள் திட்டமிட்டுள்ளதுபோல தெரிகிறது.

அதனால். சமூக வலைத்தளமான டிவிட்டரில் #BoycottAliaBhatt என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பெண் இயக்குநர் ஜஸ்மீத் கே ரீன் என்பவர் இந்த படத்தை இயக்கி நடிகை ஆலியா பட் தயாரித்து, நடித்துள்ளார்.

Updated On: 5 Aug 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?