/* */

தனுஷின் 'நானே வருவேன்' படத்துல இளம் பிக்பாஸ் பிரபலம்

தனுஷின் நானே வருவேன் படத்தில் தனுஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் நடித்துள்ளார்

HIGHLIGHTS

தனுஷின் நானே வருவேன் படத்துல இளம் பிக்பாஸ் பிரபலம்
X

அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'நானே வருவேன்'. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேயாத மான் இந்துஜா நடிக்கிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக புவன சுந்தர், கலை இயக்குநராக விஜய் முருகன், சண்டை திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

மிக அண்மையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நானே வருவேன் படக்குழு தனுஷின் லுக் இடம் பெற்ற இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது. 'இறுதிக்கட்ட பணியில்' இப்படத்தின் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அந்த போஸ்டரில் தகவல் இடம் பெற்றிருந்தது.


இந்த நிலையில் நானே வருவேன் படத்தில் தனுஷுடன் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடித்துள்ளார். இதுகுறித்து டப்பிங் முடிந்து இயக்குனர் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை அவரே பதிவு செய்துமுள்ளார்.

அவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆஜித். இவர்தான் தற்போது தமது சோசியல் மீடியாவில், "டப்பிங் பணிகள் முடிந்துள்ளது" என குறிப்பிட்டு இயக்குநர் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


இவருடைய இந்த பதிவு தற்போது தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எல்லி அவ்ராம் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படத்தை விரைவில் திரையரங்குகளுக்கு கொண்டு வர படக்குழுவினர் முழுவீச்சில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 11 Aug 2022 8:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...