/* */

bigg boss 6 ayesha will evict next week-அப்டியா..அடுத்த பாயாசம் ஆயிஷாவுக்குத் தானா..? கமலின் கோபப் பார்வையில் சிக்கிட்டார்..!

bigg boss 6 ayesha will evict next week-பிக் பாஸ் சீசன் 6-ல் முதல் வாக் அவுட் ஜிபி முத்து. அடுத்தது யாரு என்பதுதான் இப்போதைய டாக்.

HIGHLIGHTS

bigg boss 6 ayesha will evict next week-அப்டியா..அடுத்த பாயாசம் ஆயிஷாவுக்குத் தானா..? கமலின் கோபப் பார்வையில் சிக்கிட்டார்..!
X

bigg boss 6 ayesha will evict next week-பிக் பாஸ் சீசன் 6 களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த விறுவிறுப்புக்கு ஏற்றாற்போலவே பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சீசன் 5ல் பங்கேற்பாளர்கள் தேர்வில் சொதப்பல் ஏற்பட்டதால் இந்தமுறை பங்கேற்பாளர்கள் தேர்வில் மிக கவனமாக இருந்தனர். எதிர்பார்த்தது போலவே இந்தமுறை தொடக்கமே விறுவிறுப்பாக பிக் பாஸ் சூடு பிடித்துக்கொண்டது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீம் கூட கமல் சார் முன்னாடி அடக்கித்தான் எல்லா விஷயத்திலும் வாசித்து வருகிறார். ஆனால், ஆயிஷா கடைசி வரை காட்டிய அவரது அணுகுமுறையும் மீண்டும் ஷெரினாவுடன் மலையாளத்திலேயே பேசியதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் நாமினேஷனில் சிக்கினாலும் சரி, சிக்கவில்லை என்றாலும் சரி வெளியேற ரெடியா இரும்மா என்று ரசிகர்கள் ஆயிஷாவை திட்டித் தீர்த்து வருகின்றனர். வலைதளத்தில் அனல் பறக்கிறது ஆயிஷாமீது.

ஜி.பி. முத்து போல ஆயிஷாவுக்கும் விரைவில் வாக்கவுட் இருக்கும்போல என்று வெளியேறுவதற்கான அதிக வாய்ப்புகள் பற்றி பிக் பாஸ் ரசிகர்கள் #Ayesha ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


bigg boss 6 ayesha will evict next week

கமலுக்கு மரியாதை காட்டாத ஆயிஷா

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்து வருபவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் என்கிற மரியாதையும் நினைப்பும் இதுவரை நடந்த எல்லா சீசன்களிலும் எல்லா போட்டியாளர்களுக்கும் இருந்து வந்த நிலையில், ஆயிஷா மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. கமல் சார் மீது கொஞ்சம் கூட மரியாதை இருப்பதாக தெரியவில்லை என ரசிகர்கள் ஆயிஷாவை விளாசி வருகின்றனர். அடுத்தவரை எப்போதும் மாக் செய்யும் அசீம் கூட அடங்கி ஒடுங்கி அமைதியாக உள்ள நிலையில், நீ என்னம்மா அவரை போய் போர்ட்ரே பண்ணாதீங்கன்னு சொல்ற..? என்று வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஆயிஷா ஆட்டிட்டியூட் குறித்து குறும்படம் போட்டும் புரியவில்லை என்று அசீமும் ஆயிஷாவும் மீண்டும் மீண்டும் குறும்படம் போட வைத்தே கமலை கடுப்பேற்றி விட்டனர். சற்றே கோபமடைந்த கமல்,'நீங்க எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்' என அசீமின் வாயை அடைத்து விட்டார். அதே போல ஆயிஷாவிடம் பேசிய கமலையே 'என்ன தப்பா போர்ட்ரே பண்ணாதீங்க சார்..' என்று ஆயிஷா சொன்னதும் கமல் சிரித்த சிரிப்பு இருக்கே..(அது ஒரு கள்ளச் சிரிப்பைய்யா..எல்லோருக்கும் அந்த அர்த்தம் புரியாது) அதிலேயே ஆயிஷாவின் கேம் ஓவர் என்பதை பலரும் புரிந்து விட்டிருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்..கமெண்ட்ஸ்.. போட்டு வருகின்றனர்.

bigg boss 6 ayesha will evict next week

அடுத்த பாயாசம் ஆயிஷாவுக்கே

பிக் பாசில், வந்து கலந்துக்கிறது முக்கியம் இல்லம்மா..எப்டீ தக்கவைக்கிறதுங்கிறது தான் முக்கியம். அது புரியாம..கொஞ்சம் கூட முன் யோசனை இல்லாமல் இப்படி பிக் பாஸ் ஹோஸ்ட் கமல் சாரிடமே உன் திமிர் தனமான பேச்சை காட்டிட்டீயே.. ஆயிஷா அடுத்த பாயாசம் உனக்குத் தான் அம்மிணி..இல்லை..இல்லை..வம்பிணி..! . நாமினேஷனில் வந்தால் மக்கள் ஓட்டு சுத்தமாக உனக்கு கிடைக்காது என்றும் அப்படியே நாமினேஷனில் எஸ்கேப் ஆனாலும் கூட வாக்கவுட் நிச்சயம் உனக்கு உண்டும்மே..என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ஜிபி முத்துவை போல பாதாம் தெரிந்த ஜிபி முத்துவுக்கு கமல் சொன்ன ஆதாம் தெரியவில்லை என்பதற்காகவே 2வது வாரத்தில் அதிரடியாக அவர் வெளியேற்றப்பட்டார் என்றால் பாரு அம்மணி. ஜிபி முத்து அறியாமல் செய்த தவறுக்கே அப்படியொரு தண்டனை என்றால், ஆயிஷாவின் நிலை ரொம்பவே பரிதாபம் தான்..இருக்கறது கஷ்டம்தான் என்றும் கண்டிப்பாக அடுத்த பலியாடு ஆயிஷா தான் என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர். என்னே அம்மிணி இப்படீ பண்ணிட்டியே..?!

Updated On: 31 Oct 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...