/* */

மன உளைச்சலில் உள்ளேன்: நீதிமன்றத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வேதனை

மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

HIGHLIGHTS

மன உளைச்சலில் உள்ளேன்: நீதிமன்றத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வேதனை
X
நடிகர் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் நடித்த வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இசைமயைப்பாளராக இருந்து நான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அவர் நடித்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது பிச்சைக்காரன்-2 என்ற திரைப்படத்தை தனது சொந்த செலவில் தயாரித்து இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில், பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறி உள்ளார். வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

படம் வெளியாவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், படத்தை வெளியிடுவது தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தமக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி வேதனை தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன்-2 படத்தின் கதை கரு பொதுவெளியில் உள்ளதோடு, இதே கதை கருவோடு 1944 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில், பல படங்கள் வெளியாகி உள்ளதால், இந்த கதையின் கருவை மனுதாரர் உரிமை கொண்டாட முடியாது எனவும் விஜய் ஆண்டனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறபட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறுகிறது

Updated On: 18 April 2023 12:12 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?