/* */

மீண்டும் வாழ்க்கையில் ஜோடி சேர்கிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா?

Aishwarya Dhanush Latest News- புது வீடு கட்டிய பின், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக, வேகமாக தகவல் பரவி வருகிறது.

HIGHLIGHTS

மீண்டும் வாழ்க்கையில் ஜோடி சேர்கிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா?
X

aishwarya dhanush latest news-  தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?

Aishwarya Dhanush Latest News- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனுஷை விட இரண்டு வயது மூத்தவரான ஐஸ்வர்யாவின் இந்த திருமணத்தை பலர், பல கோணங்களில் விமர்சனம் செய்து பேசினார்கள் இதனால் மிகவும் பரபரப்பானது. எனினும் இரு தரப்பு பெற்றோரின் சம்மதம் பெற்று, அவர்கள் முன்னிலையில்தான் திருமணம் நடந்தது.


காதல் திருமணம் செய்துகொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள். கடந்த 18 ஆண்டுகளாக நீடித்த இவரது மணவாழ்க்கையை சுமூகமாக முடித்துக் கொள்வதாக, சில மாதங்களுக்கு முன், இருவருமே தனித்தனியாக திடீரென்று அறிவித்தது ரசிகர்களின் மத்தியில், மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யாவை பிரிந்த பின் ஏகப்பட்ட சிக்கல்களில் தனுஷ் சிக்கித் தவிக்கிறார். மேலும் சில படங்கள் அவருக்கு சரியாக ஓடவில்லை. இதனை அடுத்து ரஜினியின் மருமகனாக இருந்தபோது இருந்த வளர்ச்சி, ஐஸ்வர்யா தன்னை விட்டு பிரிந்து சென்ற பின் இவருக்கு கிடைக்கவில்லை என்று பலரும் பல விதமாக பேசி வந்த நிலையில், இவர் ஒருவழியாக, 'திருச்சிற்றம்பலம்' படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.


பிரபலங்கள் ஒன்றுசேர்ந்து, பலரும் சமாதானம் பேசிய நிலையில் இவர்களது பிரிவை தடுக்க முடியவில்லை. இவர்கள் இருவரும் அவர்கள் எடுத்த முடிவில், ஒரே நிலையில் இருந்தார்கள்.

அடுத்து தற்போது ரஜினிகாந்த் வீட்டில் சமரசம் பேசப்பட்டு உள்ளதாகவும் இதன்மூலம் இவர்கள் விரைவில் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது என்று தகவல் வந்துள்ளது இது வெறும் செவிவழி செய்திதான், அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்தது தனுஷ் புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகள் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில் கண்டிப்பாக இந்த வீட்டில் தனுஷ் ஐஸ்வர்யா உடன் இணைந்து, மீண்டும் தனது வாழ்க்கையில் தொடங்குவார் என்ற பேச்சு அடிபடுகிறது. இவர் ரசிகர்கள் அனைவரும் புது வீட்டில் அண்ணியோடு சேர்ந்து தனுஷ் அண்ணா வாழ்வதை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள் என்ற கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.


ஆனால், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தரப்பில் இருந்து, இதுவரை, 'மீண்டும் நாங்கள் ஒன்றுசேர்ந்து பழையபடி வாழ போகிறோம்,' என்ற எவ்விதமான அறிவிப்பும், வரவில்லை. ஆனால், அவர்களது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா இருவரது எதிர்காலம் கருதி, ரஜினிகாந்தின் மருமகன் என்ற புகழை இழக்க விரும்பாமல் மீண்டும் தனுஷ், ஐஸ்வர்யாவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக, சில சீனியர் சினிமா நடிகர்கள் கூறி வருகின்றனர். தனுஷ் படத்தை இயக்கிய சில முக்கிய இயக்குனர்கள் மூலமாகவும், தனுஷிடம் இதுபற்றி பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், தனுஷ் தரப்பில் எவ்வித பதிலும் இன்றி, மவுனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 Oct 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது