/* */

இரட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழா படங்களை வெளியிட்டுள்ள நடிகை நமீதா

actress namitha babies naming ceremony, namitha twins baby name Krishna Adhithya and Kian Raajஇரட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழா படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை நமீதா.

HIGHLIGHTS

இரட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழா படங்களை வெளியிட்டுள்ள நடிகை நமீதா
X

இரட்டைக் குழந்தை குழந்தைகளின் பெயர் சூட்டு விழாயை நடத்தி நடிகை நமீதா கலக்கி இருக்கிறார்.

actress namitha babies naming ceremony, namitha twins baby name Krishna Adhithya and Kian Raajதமிழ் திரை உலகில் மாப்பிள்ளை என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. மாப்பிள்ளை படத்தை தொடர்ந்து நடிகர்கள் விஜய், அஜித், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்ததால் பிரபலம் அடைந்தார். குஜராத் மாநிலம் சூரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைக்க தவறியதில்லை. சரத்குமாருடன் ஏய் என்ற படத்தில் படு கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார். இதன் மூலம் தமிழக இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

actress namitha babies naming ceremony, namitha twins baby name Krishna Adhithya and Kian Raajபொது விழாக்கள், கடை திறப்பு விழா போன்ற தனியார் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு ஏற்ற நடிகை நமீதா ரசிகர்களை பார்த்து அதுவும் குறிப்பாக ஆண் ரசிகர்களிடம் மச்சான்ஸ், மச்சான்ஸ் என தேனொழுக பேசி அவர்களின் அன்பைப் பெற்றார். பிரபல கவர்ச்சி நடிகையாக வளம் வந்த நமீதாவுக்கு மார்க்கெட் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து உடல் எடையை குறைக்க முயற்சித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி காண முடியவில்லை.இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்தர் என்பவரை நடிகை நமீதா திருமணம் செய்தார். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.

actress namitha babies naming ceremony, namitha twins baby name Krishna Adhithya and Kian Raajதனது பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பமாக இருப்பதாக கூறிய நமிதாவிற்கு பின்னர் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுடன் சமீபத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய வந்த நமீதா தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கூறினார் .ஆனால் அவர் தனது சொந்த மாநிலமான குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் கூட இதுவரை ஈடுபட்டதாக தெரியவில்லை .இந்த நிலையில் தான் நமீதா தனது சொந்த ஊரான சூரத்தில் தனது இரட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

actress namitha babies naming ceremony, namitha twins baby name Krishna Adhithya and Kian Raajதனது இரட்டை குழந்தைகள் கடவுள் கிருஷ்ணரின் ஆசீர்வாதத்துடன் பிறந்துள்ளதால் ஒரு குழந்தைக்கு கிருஷ்ண ஆதித்யா என பெயரிட்டு இருப்பதாகவும், இன்னொரு குழந்தைக்கு கியான்ராஜ் என்றும் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நமீதா கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் நமீதாவிற்கும் அவரது குழந்தைகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதோடு நல் ஆசியும் வழங்கி வருகிறார்கள்.

Updated On: 23 Nov 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...