/* */

'பொன்னியின் செல்வன்' வாய்ப்பை தவற விட்டுட்டீங்களே..? விலகிக்கொண்ட நடிகர்கள்..!?

actors who refused to act in ponniyin selvan- கல்கியின் பொன்னியின் செல்வன் சினிமாவில் நடிக்க வாய்ப்புவந்தும் நிராகரித்த நடிகர்கள், நடிகையர்கள் யார்னு தெரியுமா?

HIGHLIGHTS

பொன்னியின் செல்வன் வாய்ப்பை தவற விட்டுட்டீங்களே..? விலகிக்கொண்ட நடிகர்கள்..!?
X

பொன்னியின் செல்வன் சினிமா நட்சத்திரங்கள்.

actors who refused to act in ponniyin selvan-பொன்னியின் செல்வன்' படத்திற்கான வாய்ப்பு வந்தும் அதை நிராகரித்த நடிகர் மற்றும் நடிகைகள்.


இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி முடித்துள்ள, 'பொன்னியின் செல்வன்' படத்தில் விஜய் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருந்தார்கள். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அப்படி பொன்னியின் செல்வன் வாய்ப்பை தவற விட்ட பிரபலங்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ள ஆசையா..? வாங்க பார்ப்போம்.


actors who refused to act in ponniyin selvan-பிரமாண்ட காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்பே மணிரத்னம் எடுக்க திட்டமிட்டார். ஆனால், பட்ஜெட் பெரிதாக இருந்ததால் படம் எடுக்க முடியாமல் போனது. தற்போது இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.


ஒரு நாவலை, காட்சிப்படுத்தி திரைப்படமாக எடுப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது மிகப்பெரிய சவால். இந்த சவாலில் வெற்றிபெற்று நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் மணிரத்னம்.


பொன்னியின் செல்வன் கதையை படமாக்க எடுக்க திட்டமிட்டவுடன், வந்தியத்தேவன் பாத்திரத்திற்கு மணிரத்னம் முதலில் தேர்வு செய்தது விஜய்யை தான். விஜய்க்கும் கதை பிடித்து போனது. ஆனால் ஷூட்டிங் பணிகள் தாமதமானதால் இப்படத்திற்கு அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டி இருந்தது. அதனால் விஜய் இதில் நடிக்க மறுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.


விஜய்க்குப்பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, நடிகர் சூர்யாவுக்கு கிடைத்தது. ஆனால் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்ததால், பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை ஏற்க அவரும் மறுத்துவிட்டார்.

பின்னர் நடிகர் விஜய் சேதுபதியிடம் கதை கூறப்பட்டது. அவருக்கும் கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. ஆகவே அவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாமல் போனது.


தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு 'பொன்னியின் செல்வன்' கதையை மணிரத்னம் கூறியபோது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. ஆரம்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட மகேஷ், படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால், படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

நடிகை அனுஷ்காவை குந்தவை அல்லது நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். அவரும் படப்பிடிப்பு தாமதம் காரணமாக விலகினார்.


அதே போல், தற்போது தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த வாய்ப்புகளை தவறவிடும் சூழல் வந்தால் என்ன செய்வது என்று தயங்கி படத்தின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.


actors who refused to act in ponniyin selvan-மேலும், அமலாபால், சத்யராஜ், பார்த்திபன் போன்ற பிரபலங்களும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அவர்களும் விலகிக்கொண்டனர். இப்படி சில பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்து படத்தை ஒருவழியாக முடித்துவிட்டார், மணிரத்னம்.


தற்போது கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Updated On: 14 July 2022 11:26 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...