/* */

டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உடனடி பணப்பரிமாற்றங்களுக்கு UPI அதாவது-Unified Payments Interface- ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.

HIGHLIGHTS

டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
X

upi means in tamil-UPI பயன்பாடு (கோப்பு படம்)

Upi Means in Tamil

ஒரு காலத்தில் பொருளுக்கு பொருள் எனும் பண்ட பரிமாற்றமே நடந்து வந்தது. அதாவது உதாரணமாக உப்பு வாங்குவதற்கு தானியங்களைக் கொடுத்து வாங்குவது. காலப்போக்கில் பணம்.காசு அறிமுகமானவுடன் நாணயங்களுக்கு இணையாக பொருட்கள் வழங்கப்பட்டன.

Upi Means in Tamil

தொழில்நுட்ப வளர்ச்சியில் அதுவும் மாற்றம் பெற்று டிஜிட்டல் பரிமாற்றங்கள் வந்துவிட்டன. இதனால், நேரம், தேவையற்ற அலைச்சல் இல்லாமல் போனது. மாற்றம் என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கத்தை மனிதன் ஏற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வங்கித் துறை சேவை

பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் UPI ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் அறிந்து இருக்கமாட்டோம். எந்த ஒரு மாற்றத்தையும் புரிந்து செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தாயாராவது எளிது.இங்கு UPI பேமெண்ட்டுகளில் என்ன நடக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

Upi Means in Tamil

UPI என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) என்பது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (National Payment Corporation of India) அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு கட்டண முறையாகும். இது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் இடையில் உடனடியாகப் பணப் பரிவர்த்தனையை அனுமதிக்கிறது. UPI ஆனது ஏற்கனவே உள்ள IMPS உள்கட்டமைப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலமாக 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

NPCI என்றால் என்ன?

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் (NPCI) என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.

Upi Means in Tamil

UPI எவ்வாறு வேலை செய்கிறது?

UPI என்பது வங்கி கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் மெய்நிகர் முகவரி (mail id) மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது. இதில் பரிவர்த்தனை உங்களின் குளோபல் அட்ரஸ் (உங்களின் கைப்பேசி எண் அல்லது ஆதார் எண்) மற்றும் லோக்கல் அட்ரஸ் (மெய்நிகர் முகவரி) அடிப்படையில் நடக்கிறது.

மெய்நிகர் முகவரி

உங்கள் மெய்நிகர் முகவரி என்பது ஒரு மின்னஞ்சல் முகவரியை ஒத்தது. உதாரணமாக xyz@hdfc. இதில் xyz என்பது பயனாளியின் பெயர் மற்றும் HDFC உங்கள் உங்கள் வங்கியாக இருக்கும். மெய்நிகர் முகவரிகள் உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலான சிறந்த மாற்றுகளாகும். நீங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் மெய்நிகர் முகவரிகளை உருவாக்கலாம்.

Upi Means in Tamil

மேலும் இது மிகவும் பாதுகாப்பானது (பிட்காயின் பரிமாற்றங்களை ஒத்தது). UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஓர் ATM ல் பணம் எடுக்கிறபோது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் கொள்ளப்படுகிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.

UPI-PIN மற்றும் M-PIN இடையே உள்ள வேறுபாடு என்ன?

UPI- PIN என்பது 4-6 இலக்க குறியீடாக உள்ளது, இது BHIM பயன்பாட்டில் முதல் முறையாக நீங்கள் பதிவு செய்யும்போது உருவாக்கப்பட்டதாகும். UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இந்தக் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

MPIN என்ப‌தோ வங்கிகளால் தங்களது கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது.இவை இரண்டில் உங்களது தேவை மற்றும் பயன்படுத்தும் ஊடகத்திற்கு ஏற்ப இரண்டையும் பயன்படுத்தலாம்.

Upi Means in Tamil

BHIM என்பது என்ன?

BHIM (Bharat Interface forMoney) UPI அல்லது சாதாரணக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ய உதவுவது. பேலன்ஸ் மற்றும் ஏனைய தகவல்களுக்கும் இது பயன்படுகிறது. IMPS-ஐ வங்கி எண் குறிப்பிடும் நேரத்தையும் விட இது விரைவானது.

அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை: தற்சமயம் அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை ஒரு லட்சமாக உள்ளது.

Updated On: 16 April 2024 12:51 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!