/* */

சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேசியாவில் தடை: விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்தியஅரசு நடவடிக்கை

உலகில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், வேளாண் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

HIGHLIGHTS

சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேசியாவில் தடை:  விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்தியஅரசு நடவடிக்கை
X

நாட்டில் அனைத்து வகையான சமையல் எண்ணெய்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. தொழில்துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் தற்போதைய கையிருப்பு சுமார் 21 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். மேலும் 12 லட்சம் மெட்ரிக் டன் மே, மாதத்தில் வந்து சேரும். எனவே, இந்தோனேசியாவில் சமையல் என்னை வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் தேவையை ஈடுகட்ட போதுமான அளவு நாட்டில் சமையல் எண்ணெய் வகைகள் கையிருப்பில் உள்ளது.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையால் வெளியிடப்பட்ட இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 20221-22-ம் ஆண்டிற்கான சோயாபீன்ஸ் உற்பத்தி 126.10 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதகமான நிலையை காட்டுவதாக உள்ளது. இது கடந்த ஆண்டு உற்பத்தியான 112 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவைக் காட்டிலும் அதிகமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ராஜஸ்தான் உட்பட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பெரிய மாநிலங்களிலும் கடுகு விதைப்பு 37% அதிகரித்ததன் காரணமாக, 2021-22-ம் பருவத்தில் அதன் உற்பத்தி 114 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயரக்கூடும்.

சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அவற்றின் விலைகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறை கண்காணித்து வருகிறது, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்நாட்டு சமையல் எண்ணெய் வகைகளின் விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மேலும் குறைப்பது குறித்து விவாதிக்க முக்கிய சமையல் எண்ணெய் பதப்படுத்தும் சங்கங்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் மொத்த சமையல் எண்ணெய்களில், இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் (கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட) அளவு 62% ஆகும். அதே நேரத்தில் சோயாபீன்ஸ் எண்ணெய் (22%) அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகளிலிருந்தும், சூரியகாந்தி எண்ணெய் (15%) உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

உலகளவில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் நிலவும் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஏற்றுமதி வரிகள் அதிகரிப்பு காரணமாக சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகளில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உலகில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இத்துறையில், வேளாண் சார்ந்த பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ள 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் ஒன்பது பயிரிடப்பட்ட எண்ணெய் வித்துக்களில் 37.14 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

Updated On: 1 May 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்