/* */

ITC நிறுவனங்களின் பூர்வீகம் எது? எளிதாக வெற்றி பெற்றது எப்படி..?

போட்டியாளர்களே இல்லாமல் ITC நிறுவனங்களால் எப்படி கோலோச்ச முடிகிறது?

HIGHLIGHTS

ITC நிறுவனங்களின் பூர்வீகம் எது?  எளிதாக வெற்றி பெற்றது எப்படி..?
X

ஐடிசி நிறுவனம் (கோப்பு படம்)

ITC 1910 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் Imperial Tobacco என்ற பெயரில் இரு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. சிகரெட்டுகள் விற்பனை தான் அந்த நிறுவனத்தின் தொழில். பின்னர் Indian Tobacco Company Limited என்று மாறியது. இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அது இந்திய நிறுவனமாக மாறியது. பின்னர் I.T.C ஆக மாறி, கடைசியாக ITC என்ற பெரும் நிறுவனமாக உருவாகியுள்ளது.

இந்த நிறுவனம் 100 வருடங்களை தாண்டிவிட்டது. ITCயின் வரலாற்றில் ஒன்றை மட்டுமே காணலாம். உழைப்பு, உழைப்பு, உழைப்பு. 1960 களிலேயே consumer goods போன்றவற்றில் ஆராய்ச்சியை தொடங்கிய முதல் இந்திய நிறுவனம்.

ஆக மெது மெதுவாக இந்த நிறுவனம் சிகரெட்களிலிருந்து பல்வேறு துறைகளுக்கு மாறியது. 1975 ஆம் ஆண்டு ஹோட்டல் துறையில் காலடி எடுத்து வைத்தது. LEEDS அதாவது Leader in Energy and Environment Design போன்ற பல சுற்றுச்சூழல் விருதுகளை ஐடிசி யின் 8 சொகுசு ஹோட்டல்கள் வென்றுள்ளன. 1979 ஆம் ஆண்டு பத்ராசலம் பேப்பர்ஸ். 1983 ஆம் ஆண்டு ஒரு நேபாளிய (Surya Nepal )நிறுவனத்தை கையகப்படுத்தி பன்னாட்டு நிறுவனமாக மாறியது. 1986 ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் முதல் ஐடிசி ஹோட்டல் திறக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு edible oils துறையில் sundrop எண்ணெயை சந்தைப்படுத்தியது.

இன்றைய நாளில் ITC க்கு கிட்டதட்ட 50 பிராண்ட்டுகள் (brand) உள்ளன. Sumfeast, Aashirwad, Bingo, dewillis soap, svasti milk……இப்படி எத்தனையோ.

மேல் நாட்டு பிராண்டுகள் கோலோச்சிய காலத்தில், இந்திய பிராண்டுகள் மூலம் வெற்றி பெற்றது இந்த நிறுவனம் தான் முன்னோடி. இதற்கெல்லாம் காரணமாக இருந்த தலைவர் Y.C தேவேஷ்வர்.

1996 ஆம் ஆண்டு Y.C தேவேஷ்வர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அடுத்த 20 ஆண்டுகள் அவருடைய தலைமையில் தான் இந்நிறுவனம் அசுர வளர்ச்சியை கண்டது. ITC என்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் இவர் தான். உலகத்தின் தலை சிறந்த CEO களில் ஒருவராக அறியப்பட்டவர்.

ரிஸ்க் எடுக்கறெத்தெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு வடிவேவ் டயலாக் எல்லாம் கிடையாது, அளந்து எடுத்து வைத்த அடிகள். ITCயை ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாக உருவாக்கியவர் இவரே. இது போன்று உற்பத்தி துறையில் இருந்த ஒரு நிறுவனத்தை மற்ற பல துறைகளில் காலடி எடுக்க வைத்து வெற்றிகரமாக சாதித்திவர்கள் IBM இன் Lou Gestner போன்ற வெகு சிலரே.

இவர் கொண்டு வந்த ஈ சௌப்பல் திட்டம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கிறது. இதை நாம் தமிழில் திண்ணை (ஒரளவு) என்று மொழி பெயர்க்கலாம். இத்திட்டம் ஹாவர்டு பல்கலைகழகத்தில் பாடத்தில் case study யாக உள்ளது. இந்த உலகத்தின் மிகப் பெரிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமாக இதை பார்க்கலாம்.

1991 முதல் 1994 வரை ஏர் இந்தியாவின் செயல் அதிகாரியாக இருந்தார். தனியார் நிறுவனங்களின் திறமையை PSU களுக்கு பயன்படுத்தி கொள்ளும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இருந்த நான்கு வருடங்கள் ஏர் இந்தியா திறமையாகவே செயல்பட்டது. சரியான குறிக்கோள், அதற்கான திட்டமிடல், தடைகற்களை படிகற்களாக மாற்றுதல், அதை தொடர்ந்து வெற்றி, இதுவே அவருடைய வழி. அத்தோடு நில்லாமல் 2030 க்குள் ஒரு லட்சம் கோடி வருமானத்தை ஈட்ட வேண்டும் என்ற வருங்கால குறிக்கோளையும் நிறுவனத்திற்கு விட்டு சென்றுள்ளார்.

தகவல் உதவி: பரமேஸ்வரி

Updated On: 30 March 2024 6:07 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்