/* */

இந்தியாவில் அறிமுகமாகும் மினி எலெக்ட்ரிக் கார்

பிரபல பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான மினி அதன் முதல் மின்சார காரை இந்தியாவில் மினி எலெக்ட்ரிக் எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது

HIGHLIGHTS

இந்தியாவில் அறிமுகமாகும் மினி எலெக்ட்ரிக் கார்
X

பிரபல பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான மினி, சர்வதேச சந்தையில் மினி கூப்பர் எஸ்இ என்ற பெயரில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் காரை இந்தியாவில் மினி எலெக்ட்ரிக் எனும் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முதல் லாட்டில் 30 யூனிட் மினி எலெக்ட்ரிக் கார்களே இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான புக்கிங்குகளும் ஏற்கனவே முடிந்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ. 1 லட்சம் முன் தொகையில் புக்கிங் பணிகள் நடைபெற்றன. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய புக்கிங் தொடங்கப்பட்ட இரண்டு மணி நேரங்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் புக்காகி விட்டது.

மினி எலெக்ட்ரிக்-இல் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 181 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன் 32.6 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.


உச்சபட்ச வேகம் மணிக்கு 150 கிமீ . 7.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும்

17 இன்ச் அலாய் வீல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், யூனியன் ஜேக் தீமிலான எல்இடி டெயில்-லைட், வட்ட வடிவ ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது

ஒயிட் சில்வர், மிட்நைட் பிளாக், மூன் வால்க் கிரே மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் ஆகிய நிறங்களில் மினி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

2.5 மணி நேரத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு 11kW வசதிக் கொண்ட சார்ஜிங் பாயிண்ட் தேவைப்படும். இதைவிட வேகமாகவும் இக்காரை சார்ஜ் செய்ய முடியும். 50kW திறன் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் இக்காரை வெறும் 36 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

அறிமுக விலையாக ரூ. 47,20,000 அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Updated On: 26 Feb 2022 5:18 AM GMT

Related News