/* */

சீனாவில் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்த விமானம்

சீனாவில் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்தது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

HIGHLIGHTS

சீனாவில் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்த விமானம்
X

ஓடுபாதையில் தீப்பிடித்த திபெத்திய விமானம் 

திபெத் ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சீன விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்தது, ஆனால் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் "பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்களை ஏற்றிக் கொண்டு தென்மேற்கு நகரமான சோங்கிங்கிலிருந்து திபெத்தின் நிங்ச்சிக்கு புறப்பட்ட விமானத்தில், ​​கோளாறு கண்டறியப்பட்டு புறப்படுவது நிறுத்தப்பட்டது. விமானத்தின் பக்கவாட்டில் தீப்பிழம்புகள் சூழ்ந்தன. இதனால், பீதியடைந்த பயணிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். ​​ ஜெட் விமானத்தின் மூக்கு மற்றும் ஒரு இறக்கை பகுதியில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர்.

திபெத் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறிய காயங்களுடன் சுமார் 40 பயணிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

டி.வி.9833 விமானம் புறப்படும் போது ஓடுபாதையில் இருந்து விலகி, "விமானத்தின் மூக்கின் இடது பக்கம் தீப்பிடித்தது" என்று சோங்கிங் ஜியாங்பே சர்வதேச விமான நிலையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சோங்கிங் ஜியாங்பே சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Updated On: 12 May 2022 5:58 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!