/* */

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி

Sri Lanka Crisis News- அவருக்கு எதிராக பொதுமக்களின் சீற்றம் இருந்தபோதிலும், ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

HIGHLIGHTS

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில்   விக்ரமசிங்கே வெற்றி
X

Sri Lanka Crisis News- பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெற்றது.

இடைக்கால அதிபா் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து வந்துள்ள டலஸ் அழகப்பெருமா ஆகியோர் போட்டியிட்டனர். இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவியது.

அளிக்கப்பட்ட வாக்குகள் - 223

வாக்களிக்களிகாதவர்கள் - 2

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4

மொத்தம் செல்லுபடியான வாக்குகள் - 219

இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று அதிபரானார் ரணில் விக்ரமசிங்க. இவர் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அதிபர் பதவியில் இருப்பார்.

டலஸ் அழகப்பெருமாவுக்கு 82 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அனுரா திசநாயக 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். 223 எம்பிக்கள் அளித்த வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க,நாடாளுமன்ற அறைக்கு வெளியில்பதவிப்பிரமாணம் செய்ய அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை முதல் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்