/* */

துப்பாக்கியால் சுட்டதில் ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிருக்கு போராட்டம்...!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்ட ஆசாமியை பாதுகாப்பு படையினர் மடக்கிப்பிடித்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

துப்பாக்கியால் சுட்டதில் ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிருக்கு போராட்டம்...!
X

ஜப்பான் முன்னாள் பிரதமரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய ஆசாமியை பிடித்த பாதுகாப்பு படையினர்.

கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக ஷின்சோ பணியாற்றினார். இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பேசினார். அவர், பேசி கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால், படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரூகிறார். முன்னாள் பிரதமர் அபேவை சுட்ட நபரை ஜப்பான் போலீசார் துரத்திச் சென்று விரட்டிப் பிடித்தனர். முன்னாள் பிரதமர் அபேயை சுட்ட நபர் தானே தயாரித்த துப்பாக்கியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பிடிபட்ட நபர், யமகாமி டெட்சுயா (40) நாராவைச் சேர்ந்தவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென உடனடியாக அந்த நபர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது எனவும், அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 July 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்