/* */

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் இன்று காலையில் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் நிலநடுக்கம் பதிவு
X

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே 183 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், இன்று காலை 7:15 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த நிலநடுக்கம் காரணமாக அந்தமான், நிக்கோபர் தீவு பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

பொதுவாக, நிலநடுக்கம் என்பது, மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பவே அவை.. சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும் என, புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Jun 2022 6:56 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...