/* */

வரும் 9ல் திருப்பூர் மாவட்டத்தில் லோக்அதாலத்

திருப்பூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 9ல் நடைபெறும் என திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

வரும் 9ல் திருப்பூர் மாவட்டத்தில் லோக்அதாலத்
X

namakkal news, namakkal news today- நாமக்கல்லில், வரும் 10ம் தேதி (லோக் அதாலத்) நடைபெறுகிறது. (கோப்பு படம்)

லோக் அதாலத் என்பது மாற்று தகராறு தீர்வு வழிமுறைகளில் ஒன்றாகும், இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தகராறுகள்/வழக்குகள் அல்லது வழக்குகளுக்கு முந்தைய நிலைகளில் தீர்வு காணப்படும்/ சமரசம் செய்து கொள்ளும் மன்றமாகும். லோக் அதாலத்களுக்கு சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டம், 1987-ன் கீழ் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ், லோக் அதாலத்கள் வழங்கும் விருது (முடிவு) சிவில் நீதிமன்றத்தின் ஆணையாகக் கருதப்பட்டு, இறுதியானது மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் கட்டுப்படும் மற்றும் அத்தகைய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு எந்த நீதிமன்றத்திலும் இல்லை.

லோக் அதாலத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்போது நீதிமன்றக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விவகாரம் லோக் அதாலத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதற்குப் பிறகு தீர்வு காணப்பட்டால், புகார்கள்/மனுக்கள் மீது நீதிமன்றத்தில் முதலில் செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணமும் தரப்பினருக்குத் திருப்பித் தரப்படும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 9ல் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் ஸ்வா்ணம் நடராஜன் வழிகாட்டுதலின்பேரில், மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை மார்ச் 9ல் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் 10 அமா்வுகளும், அவிநாசி, காங்கயம், உடுமலை, தாராபுரம், பல்லடம் ஆகிய நீதிமன்றங்களில் தலா 2 அமா்வுகள் என மொத்தம் 20 அமா்வுகளும் நடைபெறுகின்றன.

இதில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், நில அபகரிப்பு அசல் வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 March 2024 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்