/* */

மிகவும் பழுதடைந்த காங்கயம் - பழையகோட்டை ரோடு; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்

Tirupur News- பழுதடைந்த நிலையில், மிக மோசமாக இருப்பதால், காங்கயம் - பழையகோட்டை ரோட்டில் சென்றுவர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

HIGHLIGHTS

மிகவும் பழுதடைந்த காங்கயம் - பழையகோட்டை ரோடு; வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
X

Tirupur News - இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியுமா என்ற நிலையில், மக்கள் சென்று வருகின்றனர்.

Tirupur News,Tirupur News Today- காங்கயம், சென்னிமலை சாலையில் ஆலாம்பாடி பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து காங்கயம் - பழையகோட்டை சாலையில் உள்ள மூலக்கடை வரை பல வருடங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை வழியாக பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

தினசரி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வேன் மற்றும் கனரக லாரிகள், அரசு பஸ், தனியார் வாகனங்கள், பனியன் கம்பெனிகளுக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன்கள், தனியார் பள்ளி வேன்கள் என தினசரி எண்ணற்ற வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. மேலும் விவசாய பொருட்களையும் விவசாயிகள் எடுத்து சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்க்கே பயன்படாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது,

இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கூட்டிச் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அவ்வப்போது குண்டும் குழியுமான சாலையால் கீழே விழுந்து செல்லும் சூழ்நிலையும் உள்ளது. இருசக்கர வாகனங்களும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக உள்ளது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை கடந்து செல்வதற்கு வெகு நேரம் ஆகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 19 Nov 2023 2:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்