/* */

தாராபுரம்; சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Tirupur News- தாராபுரத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தாராபுரம்; சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
X

Tirupur News- தாராபுரம் தொப்பம்பட்டியில் நடந்த சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- தாராபுரம் அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினாா்.

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடந்தது. இந்நிலையில், தாராபுரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பாா்வையாளராகக் கலந்து கொண்டாா்.

அக்கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது,

தமிழகத்தில் குடியரசு தினம், தொழிலாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாள்கள் கிராம சபைக் கூட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், மாா்ச் 22 (உலக தண்ணீா் தினம்) நவம்பா் 1 (உள்ளாட்சிகள் தினம்) ஆகிய நாள்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடந்தது. சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களை சிறப்பித்தல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இணையவழி வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், தூய்மைப் பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த, வீடுகளுக்கு அருகே போட்டுவைத்துள்ள மழை நீா் தேங்கக்கூடிய வகையில் உள்ள தேங்காய்த் தொட்டி, உடைந்த பாத்திரங்கள், டயா் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், வீட்டைச் சுற்றிலும் மழைநீா் தேங்காத வகையிலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், என்றாா்.

இதைத்தொடா்ந்து, வருவாய் துறை சாா்பில் 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 5 மகளிா் குழுக்களுக்கு ரூ.2.50 லட்சம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.32,879 மதிப்பீட்டில் இடுபொருள், விதை தெளிப்பான்கள் உள்பட 39 பயனாளிகளுக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.வி.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுருநாதன், பானுப்பிரியா, உதவி பொறியாளா் காந்திமதி, தொப்பம்பட்டி ஊராட்சித் தலைவா் கே.லட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.

Updated On: 2 Nov 2023 11:44 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?