/* */

கிராம சபை கூட்டத்தில் கலாட்டா

தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி சார்பில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கிராம சபை கூட்டத்தில் கலாட்டா
X

தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நடந்த கிராம சபை கூட்டம் 

தாராபுரம் அருகேயுள்ள அம்மாபட்டி அரசு ஆரம்பப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என, கவுண்டச்சிபுதூர் ஊராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஊராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அம்மாபட்டி அரசு பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.

பள்ளி வளாகம் முழுக்க மழைநீர் சூழ்ந்து, குளம் போல் இருந்ததால், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டதால், கிராம சபை கூட்டம் பள்ளி எதிரே உள்ள சாலையோரம் நடைபெற்றது. அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாக்கடை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பல ஆண்டுகளாக பாலசுப்பிரமணியர் நகர் பகுதியில் தார் சாலை அமைப்பதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், 6 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்ததால், பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை முன்வைக்க முடியவில்லை. கண்ணகி நகர், நேருநகர், நரிக்குறவர் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில், ஊராட்சி நிர்வாகத்தால் குப்பைகள் அள்ளப்படுவதில்லை; ஊராட்சி நிர்வாகத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்பது போன்ற அடுத்தடுத்த புகார் கிளம்பியதால், சலசலப்பு ஏற்பட்டது. வரும், ஜனவரி, 26ம் தேதி நடக்க இருக்கிற கிராம சபை கூட்டத்தில், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் சிறப்பு கிராம சபை கூட்டம் முடிந்தது.

Updated On: 7 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’