/* */

தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

தாராபுரம் தொகுதியில் பா.ஜ.க தலைவர்  எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் இருந்து வாகனம் மூலம் பேரணியாக சென்றார்.

இவருக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருபுறமும் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பேரணியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி மகேந்திரன், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 100 அடி தொலைவில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டதால் எல்.முருகன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி மகேந்திரன் என மூவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே சென்றனர்.

தாராபுரம் சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் டெப்பாசிட் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை அனைத்து தொகுதியிலும் இருந்து தொண்டர்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட 2, 5, 10 ரூபாயாக செலுத்தினார்.



Updated On: 18 March 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’