/* */

நெல்லையில் நவீன இயந்திரம் மூலம் துரிதமாக சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடைகள்

நெல்லையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டுள்ளது. ஆணையாளர் விஷ்ணு சந்திரன்.

HIGHLIGHTS

நெல்லையில் நவீன இயந்திரம் மூலம் துரிதமாக சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடைகள்
X

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகளில் ஏற்பட்ட அடைப்புகளை நவீன இயந்திரம் மூலம் சரி செய்யப்பட்டது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழிகளில் ஏற்பட்ட அடைப்புகளை நவீன இயந்திரம் மூலம் சரி செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளதாவது.:-

தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்குவதும், பாதாள சாக்கடை திட்ட ஆழ்இறங்கு குழிகளில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சீராக கழிவுநீர் செல்லாமல் ஆள் இறங்கு குழிகளின் வழியாக கழிவுநீர் மேல் வந்து சாலைகளில் வழிந்து ஓடுகிறது.

முக்கியமாக பாளையங்கோட்டை மண்டலம் ஸ்டேட் பேங்க் ஆபிசர்ஸ் காலனி, பொன்மணி காலனி, வேலவர் காலனி, ஆசீர்வாத நகர், வசந்தம் நகர், மகராஜநகர் தெருக்கள், AR லைன், தெற்கு ஹைகிரவுண்ட் சாலை, காமராஜ் காலனி மற்றும் திருவனந்தபுரம் சாலை ஆகிய பகுதிகளை சரிசெய்யும் பொருட்டு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தாழ்வான இடங்களில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றியும், பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்காக Sewage Jetting cum Suction Machine வாகனங்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டது. என்று மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Dec 2021 11:05 AM GMT

Related News