/* */

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான புத்தொளி பயிற்சி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான புத்தொளி பயிற்சி துவங்கப்பட்டது.

HIGHLIGHTS

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான புத்தொளி பயிற்சி
X

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான புத்தொளி பயிற்சி நேற்று துவங்கப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரும் பொருள்கள் பாதுகாப்பு என்கிற தலைப்பில் ஒரு வார காலம் நடைபெறும் புத்தொளி பயிற்சி இன்று துவங்கப்பட்டது.

இப் பயிற்சியினை துவங்கி வைத்த நெல்லை அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அரும் பொருள்களை பாதுகாப்பதின் அவசியத்தையும், வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். திருநெல்வேலி பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், பாளையங்கோட்டையில் வரலாற்றினை மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். டாக்டர். வசுந்திரன் பாளையங்கோட்டையில் உள்ள பழைய நினைவு சின்னங்களின் முக்கியத்துவத்தையும் அவற்றை பாதுகாப்பதில் அவசியத்தையும் விரிவாக மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பின்னர் அந்த மாணவ மாணவிகளுக்கு நெல்லை அரசு அருங்காட்சியக கட்டடம் முழுவதும் சுற்றி காட்டப்பட்டு அதன் வரலாற்று முக்கியத்துவம் எடுத்துக் காட்டப்பட்டன. அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரும் பொருள்கள் பற்றியும் விரிவாக விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அனைவரும் பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்துக்கு சென்று அங்கு உள்ள கோட்டையை பார்வையிட்டனர். கோட்டையின் வரலாற்று முக்கியத்துவத்தை டாக்டர் வசுந்தரன் விரிவாக எடுத்துரைத்தார். பின்னர் அனைவரும் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள கட்டபொம்மன் சிலையினை பார்வையிட்டனர்.

இந்த மரபுநடை நோக்கம் பாளையங்கோட்டையில் உள்ள முக்கியமான நினைவுச் சின்னங்களை பார்வையிட்டு அந்த நினைவுச் சின்னங்களின் வரலாற்று பின்னணியை இந்த மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து அதன்மூலமாக இதுபோன்று வரலாற்று சின்னங்களை பாதுகாக்கலாம் என நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்தார்.

Updated On: 30 March 2021 4:55 AM GMT

Related News