/* */

திமுக கொந்தளிக்க காரணம் என்ன?

கூட்டணியில் இருந்தாலும் திமுகவுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திமுக கொந்தளிக்க காரணம் என்ன?
X

பைல் படம்

தொழிலாளர் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் திரும்ப பெறுவதாக அறிவித்து விட்டாலும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் அதைப்பற்றி கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு திமுக தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் மூத்த பத்திரிகையாளர் பா. திருமாவேலன் இதற்கு பதில் அளித்து இருக்கிறார். சிபிஎம் கட்சியை தவறாக வழிநடத்துவது யார்? என்ற தலைப்பில் இந்த பதிலடி கட்டுரை அமைந்திருக்கிறது.

‘‘தொழிலாளர் சட்டத்தில் ஒரு திருத்தம் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது. அதில் தொழில் சங்கத்தினர், அரசியல் இயக்கங்கள் சில விமர்சனங்களை வைத்தார்கள் . சந்தேகங்களை கிளப்பினார்கள். உடனடியாக இரண்டே நாளில் அந்த திருத்த சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திரும்ப பெற்று விட்டார். முதல்வரின் இந்த நடவடிக்கை நடுநிலையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாத வகையில் சிபிஎம் கட்சியில் சில பேர் இருக்கிறார்கள். அக்கட்சியின் நாளிதழான தீக்கதிரில் வெளி வந்த கட்டுரையை பார்க்கும் போது அவ்வாறு அறிய முடிகிறது .

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே. ரங்கராஜன் சென்னை கோயம்பேட்டில் நடந்த மே தின விழாவில் பேசும்போது, தமிழக அரசு குறித்த தவறான கற்பிதங்களை உருவாக்கியுள்ளார். தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா ? அதிகாரிகள் அரசை தவறாக வழிநடத்துகிறார்கள். திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் இந்த சட்டத்தை கொண்டு வர காரணமான அதிகாரிகளையும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார் ? எதை வைத்து அவர் அவ்வாறு சொல்கிறார் ? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்? டி. கே. ஆர் இதைச் சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாக சாதாரண பேச்சாளர் போல கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் கூக்குரல் இடுவது தான் கூட்டணி தர்மமா? அப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூட்டணி கட்சியான சிபிஎம் தனது அதிகாரப்பூர்வ நாளிதழில் தலைப்பு போட்டு வெளியிடலாமா? இரண்டே நாளில் முதல்வர் சட்டத்தை திரும்ப பெற்றாரே டி கே ஆர் சொல்லும் முதலாளி அப்போது எங்கே போனார்? என்ன குற்றச்சாட்டு இது? டி கே ஆர் மனதில் இப்படி எத்தகைய வன்மம் இருந்தால் இப்படி பேசுவார்? எத்தகைய கோபம் இருந்தால் அதனை தலைப்பாக்கி வெளியிடுவார்கள்? சிபிஎம் கட்சியை தவறாக தமிழக சிபிஎம் கட்சியை யாரோ தவறான தவறாக வழிநடத்தி வருகிறார்கள் என்பதுதான் நம்முடைய சந்தேகம்.

சில தினங்களுக்கு முன்னால் கட்சியின் சார்பில் இயங்கி வரும் பாரதி புத்தகாலயம் நூல் வெளியிட்டுள்ளது. சர்வாதிகார இந்துத்துவா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா? என்பது தான் தலைப்பு. பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலினையும் கார்ட்டூன் போட்டு உள்ளார்கள். திராவிட மாடல் மாற்றாகாது என்று சொல்லும் இந்த நூல் 95 ஆண்டு காலம் தமிழ் சமுதாயத்துக்காக உழைத்த தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்துகிறது . திராவிடம் என்பது இனவாத திராவிட இயக்கத்தை குறிப்பாக கலைஞரை கொச்சைப்படுத்தும் நூலை வெளியிட்டு மகிழ்ந்து உள்ளார்கள். இத்தகையவர்களால் தான் சிபிஎம் வழிநடத்தப்படுகிறது. அதன் குரல் தான் டி. கே. ஆர் போன்றோரின் குரலோ? இதுதான் சிபிஎம் குரலா? என்பதே நமது கேள்வி. திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்.. என்று சொல்லும் தகுதியோ, யோக்கியதையோ டி. கே. ஆர் போன்றோருக்கு இல்லை’’ என்று விளாசி எடுத்திருக்கிறது.

Updated On: 7 May 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!