/* */

ஒமைக்ரான் ஒரு சில நிமிடங்களில் பல ஆயிரம் பேரிடம் பரவும்: சுகாதாரத்துறை

படுக்கை இல்லை ஆக்ஸிஜன் இல்லை மருந்து மாத்திரை இல்லை என்ற நிலை இனி வரக்கூடாது என்பதில் மருத்துவத்துறை தீவிரமாக இருக்கிறது

HIGHLIGHTS

ஒமைக்ரான்  ஒரு சில நிமிடங்களில் பல ஆயிரம் பேரிடம் பரவும்: சுகாதாரத்துறை
X

டெல்டா வைரஸ் போல் ஒமைக்ரான் கடும் தாக்குதலை தொடுக்காவிட்டாலும், சில நிமிடங்களிலேயே பல ஆயிரம் பேருக்கு வேகமாக பரவக்கூடியது என்பதுதான் இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா முதல் அலையின் போது, இந்தியா முழுவதும் கடுமையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் முதல் அலை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. எனவே கொரோனா பெரும் பாதிப்பு ஏற்படுத்தாது என மத்திய, மாநில அரசுகள் சற்று அயர்ந்திருந்த நேரம் டெல்டா வைரஸ் இரண்டாவது அலையாக உருவாகி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. மக்கள் படுக்கை வசதிகள் கிடைக்காமலும், ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி விட்டனர். அதேபோல் ரெம்டெசிவிர், பெவிப்பிராவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகளுக்கும் தட்டுபாடு ஏற்பட்டது. உயிரிழப்புகளும் கடுமையாக இருந்தது. தற்போது வரை டெல்டா வைரஸ் தாக்குதல் இருந்து கொண்டேதான் உள்ளது.

டெல்டாவின் பாதிப்பிற்கு பின்னர் குணமடைந்தவர்களும் தொடர்ச்சியாக நுரையீரல் பிரச்னை, கருப்பு பூஞ்சை தாக்குதல் என பல்வேறு தொற்றுகளுக்கு உள்ளாகினர். இதனால் கொரோனா என்றாலே மக்கள் அச்சமுறும் அளவில் இருந்து வருகிறது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் உச்சத்தை எட்டி உள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் ஒமைக்ரான் பரவல் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விடும் நிலையில் உள்ளது. அங்கிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் டெல்டாவோடு ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேருக்கு பாதிக்கிறது.

ஒரு சில நிமிடங்களில் பல ஆயிரம் பேரை தொட்டு விடுகிறது. இதில் மிக, மிக குறைந்த சதவீதம் தான் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை உள்ளது. மற்றவர்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகவில்லை. இவ்வளவு இருந்தும் இந்தியா போன்ற நாடுகள் பதற்றமடையக் காரணம், இந்தியாவில் மிக, மிக குறைந்த சதவீதமே பல கோடிகளை தொடும். ஓரிரு நாட்களில் இத்தனை பேருக்கு சிகிச்சை என்பது சாத்தியமில்லாத நிலையை உருவாக்கி விடும். ஆனாலும் தற்போது மருத்துவ உள் கட்டமைப்புகள் மிக வலுவாக உள்ளன. படுக்கை இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. மருந்து மாத்திரைகள் இல்லை என்ற நிலை இனி வரக்கூடாது என்பதில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மிகத் தெளிவாக திட்டமிட்டு தயாராகி வருகின்றன.

ஆனால் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு தொடர் பிரச்னைகள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே ஒமைக்ரானை எளிதாக எண்ண வேண்டாம். ஒமைக்ரானை கடப்பது சற்று கடினம் தான் என சுகாதாரத்துறை பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வளவுக்கும் பிறகும் என்ன தான் தீர்வு. தடுப்பூசி, முககவசம் தவிர வேறு தீர்வுகள் கண்ணில்படவில்லை. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு முககவசம் அணிவதை உறுதி செய்வதே பாதுகாப்பான வழி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 30 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!