/* */

சுடுகாட்டிலும் இடமில்லை - வருஷநாடு அருகே சடலத்துடன் பொதுமக்கள் மறியல்

மயானத்தில் புதைக்க இடம் இல்லை; விரிவாக்கம் செய்து தாருங்கள் என, வருஷநாடு அருகே கிராம மக்கள், சடலத்துடன் மறியல் செய்தனர்.

HIGHLIGHTS

சுடுகாட்டிலும் இடமில்லை - வருஷநாடு அருகே சடலத்துடன் பொதுமக்கள் மறியல்
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வனத்தாயிபுரம் கிராமத்தில், சுடுகாடு மிகவும் சிறியதாக உள்ளது. இறந்தவர்களை புதைக்க, இங்கு போதிய இடம் இல்லை. சில நேரங்களில் ஏற்கனவே புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து விட்டுமீண்டும் புதைக்க வேண்டி உள்ளது.

இந்நிலையில், வனத்தாயிபுரத்தை சேர்ந்த ஒரு முதியவர் இறந்தார். அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதையும், மிக, குறுகியதாக இருந்தது. அங்கு இடமும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், இறந்தவர் உடலை ரோட்டில் வைத்து மறியல் செய்ய தொடங்கி விட்டனர்.

ஆண்டிபட்டி வருவாய்த்துறை அதிகாரிகள், கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மக்களுடன் சமரச பேச்சு நடத்தி, சுடுகாட்டை விரைவில் விரிவுபடுத்தி தருவதாக கூறி உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து இறந்தவர் உடலை புதைக்க எடுத்துச் சென்றனர்.

Updated On: 30 Nov 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...