/* */

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எருமலைநாயக்கன்பட்டி தலைவர் உறுதி

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எருமலைநாயக்கன்பட்டி தலைவர் உறுதி
X

தேனி மாவட்டத்தின் சிறந்த ஊராட்சி தலைவராக தேர்வு பெற்ற எருமலைநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவர் பால்ராஜ்.

பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எருமலைநாயக்கன்பட்டி கிராம ஊாரட்சியில் நீர் வள ஆதாரத்தை பெருக்க வேண்டும். குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதே என் முன்உரிமை பணியாகும் என தலைவர் எஸ்.பால்ராஜ் தெரிவித்தார்.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் கலெக்டர் முரளீதரனிடம் சிறந்த பஞ்சாயத்து தலைவர் என விருது பெற்றார்.

தலைவர் எஸ்.பால்ராஜ். இவ்வளவு முக்கிய விருது பெறும் அளவுக்கு என்ன தான் சாதித்தார் என அவரிடமே கேட்டோம். அவர் கூறியதாவது:

தினமும் காலை 9 மணிக்கு அலுவலகம் வந்து விடுவேன். பிற்பகல் 6 மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். மதியம் ஒரு மணி நேரம் மட்டும் உணவு இடைவேளை எடுப்பேன். கிராம வளர்ச்சி திட்டத்தை வடிவமைப்பது, திட்ட மதிப்பீடு, அரசுக்கு புரொபசல் சமர்பித்தல்,

பொது கணக்கு நிதி நிர்வகித்தல், துல்லிய வரவு செலவுகள், கிராம பேரேடுகள் நிர்வகித்தல், அரசு கேட்கும் கிராம தகவல்களை உடனுக்குடன் அளித்தல், அரசு சொல்லும் பணிகளை அவர்கள் எதிர்பார்த்து போலவே செய்து முடித்தல் போன்ற பணிகளில் நான் சிறப்பாக செயல்பட்டதால் எனக்கு சிறந்த கிராம ஊராட்சி தலைவருக்கான விருது வழங்கப்பட்டதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள எருமலைநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி தலைவராக நான் பதவி வகிக்கிறேன். இந்த ஊராட்சி வைகை அணை மற்றும் மஞ்சளாறு அணைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

ஆனால் மிகவும் வறண்ட கிராமமாக உள்ளது. இங்கு குடிநீர் பிரச்னை உள்ளது. தவிர விவசாய நிலங்கள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன.

கால்நடை வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு இந்த மக்களின் முக்கிய இணைத்தொழில் ஆனால் அதுவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நான் பொறுப்பேற்றது முதல் குடிநீர் பிரச்னையை சரி செய்ய முழு முயற்சி செய்து வருகிறோம். முறையற்ற குழாய் இணைப்புகளை முறைப்படுத்தினோம்.

ஜல்ஜீவன் திட்டத்தில் அத்தனை வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளோம். ஆனால் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.

இன்னும் பலர் அந்த கட்டணத்தை செலுத்தவில்லை. கட்டணம் செலுத்தாதவர்களுக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமே அறிவுறுத்தி உள்ளது.

எருமலைநாயக்கன்பட்டி ஒரு நலிவுற்ற கிராம ஊராட்சி. இந்த சொத்து வரி குடிநீர் வரியை தவிர வேறு எந்த வருமானமும் இல்லை.

கிராம ஊராட்சிக்கு சொந்தமான புளியமரங்கள் மூலம் ஆண்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. மாநில நிதிக்குழு மானிய நிதி, 15வது நிதிக்குழு நிதி மூலம் மட்டுமே ஓரளவு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் பணிகள், பேவர் பிளாக் அமைக்கும் பணிகள், ரோடு சீரமைக்கும் பணிகள், பள்ளி கட்டடம் கட்டும் பணிகள் சுமார் 2.50 கோடி செலவில் நடைபெறுகிறது.

இதில் சில பணிகள் தொடங்கி உள்ளன. சில பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. கால்நடை கிளை மருந்தகம் கட்டுவது, அங்கன்வாடி மையம் கட்டுவது, சுடுகாட்டு எரியூட்டும் கொட்டகை கட்டுவது,

அங்கேயே பொதுமக்கள் சற்று நேரம் தங்க வசதியாக கான்கிரீட் கொட்டகை அமைக்கும் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு புரொபசல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது குடிநீர் சப்ளையை முறைப்படுத்துவதில் பிரச்னை உள்ளது உண்மை தான். ஜல்ஜீவன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் நிறைவடைந்ததும் கிராமத்தில் குடிநீர் பிரச்னை தீரும். இதுவே எனது முதல் கனவு. மற்றபடி வறுமையான ஊராட்சியாக இருந்தாலும்,

வரவு செலவு துல்லியம் காரணமாக மக்களுக்கு தேவையான பணிகளை அவ்வப்போது முடித்துக் கொடுத்து விடுகிறேன். கிராமத்தை சுத்தமாக வைத்துள்ளோம்.

எனது முக்கிய கனவு முப்போகம் விளைந்த நிலங்களில் மீண்டும் அதே நிலையை கொண்டு வர வேண்டும். இதற்காக மஞ்சளாறு அணையில் இருந்து எங்கள் கிராமத்தில் 13வது மடை வரை தனி கால்வாய் அமைப்பதே தீர்வு.

ஏற்கனவே துார்ந்து கிடக்கும் கால்வாயினை மறுசீரமைப்பதும் என் முக்கிய கனவு. இதற்காக மனு கொடுத்து அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கிராம மக்கள் என்னை நம்பி இந்த பதவியை கொடுத்துள்ளேன். நான் எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்து முடிப்பேன்.

இதுவரை பெரிதாக சாதிக்கவில்லை என்பது ஒரு குறையே இல்லை. ஆனால் இனிமேல் மிகப்பெரிய சாதனைகளை செய்யும் அளவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

இன்னும் சில மாதங்களில் பாருங்கள் எங்கள் கிராமம் எப்படி மாறியிருக்கும் என்பதை. இதனை நேரில் உணர்த்திய பின்னர் என் உழைப்பு மக்களுக்கு தெரியும். இவ்வாறு கூறினார்.

Updated On: 27 Aug 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!