Begin typing your search above and press return to search.
டூ வீலர்- கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு: தடுப்பு வைக்க கோரி மக்கள் மறியல்
கூடலுாரில் விபத்து நடந்து, வாலிபர் பலியான இடத்தில் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS

கூடலுார் ராஜீவ்காந்திநகர் பைபாஸ் ரோடு சந்திப்பில் டூ வீலர்- கார் மோதிய விபத்தில் வாலிபர் ராகவன் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரியும், விபத்து நடந்த இடத்தில் விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், ஹைமாஸ் விளக்குகள், இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கவும் வலியுறுத்தி பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் குணா உட்பட பொதுமக்கள் பலர் மறியலில் ஈடுபட்டனர். கூடலுார் தி.மு.க., நகர செயலாளர் லோகன்துரை தலைமையில் மறியல் நடத்திய மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.