/* */

உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருக்கிறதா?

2000 Rupees Note Exchange In India Amazon-கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி, ரூ.2000 கரன்சி நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது.

HIGHLIGHTS

உங்களிடம் 2000 ரூபாய்  நோட்டு இருக்கிறதா?
X

2000 rupees note news in Tamil கடந்த மே 23 முதல் வரும் செப்.30-ம் தேதி வரையில் பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. நாளொன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள் பெருபாலும் மக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை நிறுத்தி விட்டன.

இந்நிலையில், முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ``ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டு மூலம் தங்களிடம் பொருள்களை வாங்கலாம்" என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டரின் போது 2000 ரூபாய் நோட்டை அமேசான் டெலிவரி ஏஜென்டிடம் கொடுத்து பொருள்களை வாங்கலாம்.

இது குறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `` வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. அமேசானில் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பொருள்களை வாங்கும் போது, அந்தப் பொருளை கொண்டு வரும் முகவரிடம் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கலாம், மீதித் தொகையை அமேசான்-பே இருப்பில் சேர்த்துக் கொள்ளலாம். கேஒய்சி விதிமுறைகளை முழுமையாக நிறைவு செய்த வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரை அமேசான்-பே இருப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்து சேர்த்துக்கொள்ளலாம்.

கேஷ் லோட் அட் டோர் ஸ்டெப் என்ற சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை அமேசான் டெலிவரி பிரதிநிதிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். அமேசான் பே மூலம் இது செயல்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் அமேசான் தளத்தில் கேஒய்சி செய்திருக்க வேண்டும். கேஷ் லோட் அட் டோர் ஸ்டெப் சேவையின் மூலம் மாதத்துக்கு 50,000 ரூபாய் வரையில் வாடிக்கையாளர்கள் பயன் பெற முடியும்.

கேஷ்-ஆன்-டெலிவரி மூலம் அமேசான் தளத்தில் பொருள்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள், அந்தப் பொருளுக்கான தொகை போக தங்கள் கையில் உள்ள கூடுதல்தொகையை பிரதிநிதிகளிடம் கொடுத்து, அதை வாடிக்கையாளர்களின் அமேசான் பேவுக்கு கிரெடிட் செய்துகொள்ளலாம். Amazon Pay இன் 24x7 வசதி மற்றும் பாதுகாப்புடன் தங்களுக்குப் விருப்பமான அனைத்து ஆன்லைன் பயன்பாடுகளிலும் பணம் செலுத்தலாம்" என்று தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 9:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  2. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  4. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  5. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  6. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  8. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  9. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  10. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை