/* */

அரக்கோணம் அருகே வீடுகளை அகற்றுதல் தொடர்பாக கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.

அரக்கோணம் அடுத்த பெருமுச்சி கிராம ஏரிப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுதல் தொடர்பாக பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே வீடுகளை அகற்றுதல் தொடர்பாக கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.
X

கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த கிராம மக்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமுச்சி கிராம ஏரிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அதில் அவர்கள் பெருமுச்சி கிராம ஏரிப்பகுதியில் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரும் 300 மேற்பட்ட குடும்பங்கள் ஒற்றுமையுடன் வீடுகட்டி வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர். மேலும், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டை,ஆதார் அட்டை வாக்காளர் அட்டை உட்பட அனைத்து அடையளங்களும் மேற்படி விலாசத்தின் பேரில் பெற்றுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அனைத்துஅரசு சலுகைகளும் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் வீட்டு வரி குழாய் வரி மற்றும் மின் கட்டணம் மற்றும் வருவாய்த்துறைக்கு மனை வரியையும் முறையாக செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு நீர்ஆதாரத் துறையிலிருந்து அவர்கள் அனைவருக்கும் கடிதம் வந்ததாகவும், அதில் ,தாங்கள் வசிக்கின்ற பகுதி ஏரிப்பகுதி ஏனவும் நீர்நிலை புறம்போக்கு இடம் என்பதால் வீடுகளைக்கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் விரைவில் அகற்றவேண்டும் என்று காலவகாசம் வழங்கி நோட்டீஸை வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளதாகவும் தங்கள் வீடுகளை அகற்றுதல் தொடர்பாக நடவடிக்கைகளை தவிர்க்கும்படி கோரிக்கை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

இதனையடுத்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப் பாண்டியன், அனைவைரையும் அழைத்து மனுக்கள் குறித்து கேட்ட அவர் அனைவரிடமும் நீங்கள் 4 , தலைமுறைகளாக குடியிருந்துவருவது நீர்நிலை புறம்போக்கு பகுதியாகும். எனவே அவை தற்போது விதி எண் ,61ன் கீழ் உங்களை அந்தப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

நீதிமன்ற உத்தரவின் பேரிலும் அரசின் வழிகாட்டுதல் பேரிலும் விதிமுறைகளின் படியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார் . மேலும் நீர்நிலைகளில் உள்ள வீடுகளுக்கு பதில் அதே பகுதியில் மாற்று இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு அவற்றில் அரசு செலவில் வீடுகளையும் கட்டி வழங்கப்படும் என்று உறுதியினையளித்தார்.

அதனைத்தொடர்ந்து ஆட்சியரின் உறுதிமொழியில் திருப்தியடைந்த அனைவரும் மிகுந்த மன நிறைவுடன் அனைவரும் கிளம்பிச் சென்றனர்

Updated On: 13 Dec 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...