/* */

போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற தலைவிகளுக்கு எடப்பாடி வாழ்த்து

நெமிலி ஒன்றியத்தில் போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற தலைவிகளுக்கு முன்னாள் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

HIGHLIGHTS

போட்டியின்றி தேர்வான ஊராட்சி மன்ற தலைவிகளுக்கு எடப்பாடி வாழ்த்து
X

ஊராட்சிமன்ற தலைவர்களாக போட்டியின்றி தேர்வானவர்களுக்கு சால்வையணிவித்த எடப்பாடி பழனிச்சாமி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு அரக்கோணம் ஆற்காடு வாலாஜா, திமிரி, சோளிங்கர், காவேரிப்பாக்கம், நெமிலி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வேட்பு மனுக்கள் கடந்த 15ந்தேதிமுதல் 22ந்தேதி மாலை வரை பெறப்பட்டது.

அதில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரிகலபாடி ஊராட்சி மன்ற தலைவராக வள்ளி, வேட்டாங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சாந்தி, நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவராக ரேணுகா ஆகிய மூவரும் வேட்பு மனுதாக்கல் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் அவர்களுக்கு, ராணிப்பேட்டையடுத்த வாலாஜாவில் திருமணமண்டபத்தில் நடந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அதிமுக வெற்றி வியூக ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் அப்போது நிகழ்ச்சியில், ஊராட்சிமன்ற தலைவர்களாக போட்டியின்றி தேர்வான வள்ளி,சாந்தி, மற்றும் ரேணுகா ஆகியோருக்கு சால்வையணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அவர்களை சிறப்பாக மக்கள் பணியாற்றும் படி கேட்டுக்கொண்டார் அவருடன் அதிமுக சட்டசபைதுணை கொறாடாவும் மாவட்ட செயலாளருமான அரக்கோணம் சு.ரவி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Updated On: 24 Sep 2021 6:06 AM GMT

Related News