/* */

இராமேஸ்வரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

இராமேஸ்வரம் தீவினை சுற்றி அதிகரிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை. உணவு பாதுகாப்புத்துறை பறிமுதல்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

இராமேஸ்வரம் கடலோர கிராமங்களில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இராமேஸ்வரம் தீவினை சுற்றி அதிகரிக்கும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை. உணவு பாதுகாப்புத்துறை அதிரடியால் தொடர்ந்து சிக்கும் புகையிலை பண்டல்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்.

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களை சீரழித்து வரும் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, புகையிலை பாக்கெட்டுகள் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.மீன் பிடியும், சுற்றுலாவும் பிரதான தொழிலாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் வட மாநில சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் போதை வஸ்துகள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது.

டாஸ்மாக் மதுபானங்கள், கஞ்சா போன்ற அதிக விலையுள்ள பொருட்களுக்கிடையே போதை தரும் பாக்கு, புகையிலை பாக்கெட்டுகளின் விற்பனையும் அதிகளவில் உள்ளது. ராமேஸ்வரம் நகர் பகுதி மட்டுமல்லாது, கடற்கரையோர பகுதியிலும் இதன் விற்பனை அதிகளவில் உள்ளது.இலகுவாக கிடைக்கும் என்பதால் மீனவர் சிறுவர்களும் இதனை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். வடமாநிலங்களில் இருந்து வரும் யாத்ரீகர்கள் 50 சதவீதத்தினரிடம் போதைப் பாக்கு, புகையிலை போடும் வழக்கம் உள்ளது.

இதனால் இவர்களது தேவைக்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் இவ்வகை போதை வஸ்துகள், மீனர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் ; இலகுவாக சேர்ந்து விடுகிறது. பொழுது போக்குவதற்கு புகைபிடிப்பது போல் ஒன்றுக்கு மேற்பட்டஇளைஞர்கள் சேர்ந்து விட்டாலே இதனை பயன்படுத்துகின்றனர்.போதை பாக்கு, புகையிலை போன்றவை விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மறைமுகமாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் இன்று காலை முதல் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம்,பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை செய்ததில் சுமார் 45 கிலோ போதைபாக்கு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1 லட்சத்து ரூபாய் இருக்கலாம் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பின் அழிக்கப்பட்டது.

புகையிலை பொருட்களை சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு மீண்டும் சாப்பிட தூண்டும். நாளடைவில் இந்த பழக்கம் அதிகமாகி உடலுக்கு கேடு விளைவிக்கும். புகையிலையால் வாய் புற்று நோய் ஏற்படும். இளைஞர்களுக்கு நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு ஏற்படும்.இவற்றை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வெளி மாநிலங்களில் இருந்து எளிதாக கொண்டு வருகின்றனர். கடைகளில் புகையிலை விற்பனை செய்தால் 94440-04232 என்ற அலைபேசிக்கு கடை முகவரியோடு தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 Feb 2022 1:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...