/* */

பாம்பன் பாலத்தைகடந்து சென்ற பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள்

எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் பாம்பன் பாலத்தை வரிசையாக அடுத்தடுத்து கடந்து சென்றன

HIGHLIGHTS

பாம்பன் பாலத்தைகடந்து சென்ற பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள்
X

பாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள்

பாம்பன் பாலத்தை அடுத்தடுத்து கடந்து சென்ற எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான 3 ரோந்து கப்பல்கள் அடுத்தடுத்து கடந்து சென்றது. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்குப் பாலம் புகழ்பெற்றதாகும். இந்த கடல் வழிப்பாதை வழியாக கொல்கத்தா, அந்தமான் தீவுகளுக்கு செல்லலாம். இந்த தூக்குப்பாலத்தின் வழியாகத்தான் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் செல்கின்றன.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான மூன்று ரோந்து படகுகள் கொச்சினில் இருந்து இருந்து மேற்குவங்கம் செல்ல பாம்பன் தெற்கு மீன் பிடி துறைமுகத்திற்கு வந்தன.இந்த மூன்று ரோந்து படகுகளும் கடந்த வெள்ளிகிழமை காலை பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டு மேற்கு வங்கம் செல்ல பாம்பன் துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

ஆனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக ரோந்து கப்பல் பாம்பன் பாலம் வழியாக கடந்து செல்ல கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கபட்டது. இதனையடுத்து மீண்டும் ரோந்து கப்பல்கள் பாம்பன் தெற்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.இன்று காலை கடல் பருவநிலை சீராக இருந்ததால் பாம்பன் தூக்கு பாலம் திறக்கபட்டு தெற்கு கடல் பகுதியில் காத்திருந்த எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள், எல்லை பாதுகாப்பு படை ரோந்து பணிக்காக மேற்கு வங்கதேசம் நோக்கி பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. இதனை தொடர்ந்து உள்ளூர் மீன் பிடி விசைப்படகுகள் சில பாம்பன் பாலம் வழியாக கடந்து சென்றது.பாம்பன் பாலம் வழியாக மூன்று ரோந்து கப்பல்களும் அடுத்தடுத்து கடந்து சென்றதை பாம்பன் சாலை பாலத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன் செல்போன்களில் வீடியோ மற்றும் செல்பி எடுத்தனர்.

Updated On: 31 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...