/* */

இராமேஸ்வரம் மீனவர்களுடன் இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை

மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த வசதிகள் குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் மீனவர்களுடன் இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை
X

இராமேஸ்வரத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தலைமையில் பாம்பன், இராமேஸ்வரம், மண்டபம் பகுதிக மீனவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மத்திய, மாநில அரசுகள் மீனவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்த வசதிகள் குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை.

இராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதியில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தலைமையில் பாம்பன், இராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படை குழுமம், கியூ பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து விசைப்படகு மீனவ சங்க பொதுச்செயலாளர் போஸ் கூறியது: இலங்கையில் இருக்கக்கூடிய இந்தியத் தூதர் முதன் முதலில் இராமேஸ்வரம் மீனவர்களை சந்தித்துள்ளது. இதுதான் முதல் முறை இதேபோல் நேரடியாக வந்து எங்களின் குறைகளை கேட்டு அறிவது எங்களுக்கு சந்தோசமாக இருக்கின்றது. எங்களுடைய குறைகளைச் சொன்னோம். எங்களுடைய மீனவர்கள் தாக்கப்படுவது, படகுகள் மோதி உயிரிழப்பை ஏற்படுத்துவது, படகுகளை விடுவிக்கபடாமல் இருப்பது, நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டும் அதனை விடுவிக்கப்படாமல் இருப்பது, இலங்கையில் நல்ல முறையில் இருக்கின்ற விசைப்படகுகளை விடுவிக்க சொல்லி இருக்கிறோம், அதற்குண்டான நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அது அரசுகள் சொல்லும் படியாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருநாட்டு மீனவர்களும் அவர்களாக நேரடியாக பேசக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று சொன்னோம் அதற்குண்டான நடைமுறைகள் எல்லாம் செய்து கொண்டிருப்பதாகவும், இலங்கை அரசை வன்மையாக கண்டித்ததாகவும், மீனவர் பிரச்சினைக்கு இலங்கை மீனவர்களுடன் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளனர். கடந்த 1983 ஆண்டுகளுக்கு பின்னர்தான் இராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டக் கூடாது என்று தடுத்து நிறுத்தியதாகவும் அதற்கு முன்பு வரை இருநாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வந்ததாக தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து மீனவ விசைப்படகு சங்க பொதுச்செயலாளர் என்.ஜே. போஸ் தெரிவித்தார்.

Updated On: 22 Nov 2021 11:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!