/* */

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் சிக்கியது.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ட 20 கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்டது. 5 பேர் கைது

HIGHLIGHTS

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கம் சிக்கியது.
X

தனுஷ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள், வலி நிவாரணி, பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக உள்ளது.

இந்நிலையில் கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக சர்வதேச கடலோர எல்லையில் இந்திய-இலங்கை கடற்படை தீவிரமாக ரோந்தில் ஈடுபட்டு வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கையை மீறி கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று சந்தேகத்துக்கிடமாக மணலி தீவு அருகே நின்று கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல் படையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றதுடன் கடலில் இரண்டு பார்சல்களை கடலில் வீசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பைபர் படகை மடக்கி பிடித்து படகில் இருந்தவர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் படகில் இருந்த வேதாளையை சேர்ந்த இருவர் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவரையும் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பிடிப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிழமை இரவு வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மற்றொரு படகு மடக்கி பிடித்து சோதனை செய்து படகில் இருந்து 21.26 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதுடன் வேதாளையை சேர்ந்த மேலும் இருவரை கைது செய்து செய்தனர்.

மேலும், கடலில் வீசப்பட்ட தங்கத்தை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தேடி சென்ற போது தங்கம் கிடைக்காத நிலையில் இன்று நடுக்கடலில் கடத்தல்காரர்கள் வீசிய பார்சலை தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. கடலுக்கு அடியில் சென்று தேடும் இந்திய கடலோர காவல் படை ஸ்கூபா டைவிங் வீரர்கள் கடலில் முத்து எடுக்கும் கடல் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு பலூன் விரைவு ரோந்து படகு, இரண்டு பைபர் படகுகளில் கேஸ் சிலிண்டர், ஒளிரும் லைட், மற்றும் எக்கோ சவுண்ட் கருவி உள்ளிட்ட நவீன சாதனங்களின் உதவியுடன் புறப்பட்டு சென்றனர்.

இன்று அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடலில் கலக்கல் ஏற்பட்டுள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அதி நவீன கருவிகளை கொண்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படை ஸ்கூபா வீரர்கள், உதவியுடன் மணாலி தீவுக்கும் சிங்கிலி தீவுக்கும் இடையே கடலுக்கு அடியில் வீசப்பட்ட தங்கம் கட்டிகள் கொண்ட பார்சல் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட பார்சலில் சுமார் 11.6 கிலோ தங்கம் இருப்பதாக மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 20 கோடி மதிப்பிலான 32.8 கிலோ தங்கம் பிடிப்பட்டதாக இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 2 Jun 2023 6:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!