Begin typing your search above and press return to search.
மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி சிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்
தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி சிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ கட்சியினர்.
இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி சிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தியும். இரவு நேரத்தில் ஒரு மருத்துவரை பணியில் அமர்த்த கோரியும். ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரியும். தங்கச்சிமடம் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட கோரியும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.