/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு முகாம்
X

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 03.12.2021 அன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் 31.08.2021 அன்று சட்டப்பேரவையில் "விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இவ்வரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்" என்ற அறிவிப்பிற்கிணங்க சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சிறப்பு முகாமில் நில அளவை (புல) எண்கள்/உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார் / காப்பாளர் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை குறித்த திருத்தம், மேற்குறிப்பிட்ட சில கலங்கள் பதிவுகளின்றி (வெற்றாக) இருக்கும் இனங்கள், ஒரு பட்டாதாரரின் பரப்பு / பெயர் பக்கத்து நிலத்தின் பட்டாதாரரின் விவரங்களுடன் (ஒன்றின் இடத்தில் மற்றொன்று மாறியிருக்கும் இனங்கள்) குறித்த மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 03.12.2021 அன்று பெரம்பலூர் வட்டத்தில் கல்பாடி (வ), கல்பாடி (தெ) வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கல்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வேப்பந்தட்டை வட்டத்தில், பில்லங்குளம், காரியனூர் வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு காரியானூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், குன்னம் வட்டத்தில் ஓலைப்பாடி (கி), ஓலைப்பாடி (மே), பரவாய் (கி) மற்றும் பரவாய் (மே) வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஆலத்தூர் வட்டத்தில் காரை (கி), காரை (மே) மற்றும் தெரணி வருவாய் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு காரை (கி) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் இம்முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Dec 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!