/* */

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் ஆய்வு.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
X

தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொள்ளும் பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய குழுவினர், மங்களமேடு உதவி ஆய்வாளர் ஆகியோர்கள் அடங்கிய குழு, பெரம்பலூர் மாவட்டத்தின் மத்தியில் செல்லும் திருச்சி முதல் சென்னை என்.ஹெச்-45 தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது எவ்வாறு விபத்து ஏற்படுகிறது எனவும், அத்தகைய விபத்தினை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும், விபத்து நடக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 7 Sep 2021 4:45 AM GMT

Related News