/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 162 வழக்குகளுக்கு தீர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிப்பதற்கான தேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 162 வழக்குகளுக்கு தீர்வு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிப்பதற்கானதேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் ஒருங்கிணைந்தநீதிமன்றத்தில் நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி சுபா தேவி தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில்,நிரந்தர மக்கள் நீதி மன்ற தலைவர் கிரி, சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி மலர்விழி,தலைமை நீதித்துறை நடுவர் மூர்த்தி, சார்பு நீதிபதி ஷகிலா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்மற்றும் சார்பு நீதிபதி லதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி, நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதா, சேகர், முனிகுமார், ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு அளித்தனர்.

அதன்படி இதில் ஒரு வங்கி வழக்குகள், 23 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 8 சிவில் வழக்குகள், 130 சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 162 வழக்குகளில், ஒரு கோடியே 76 லட்சத்து 3 ஆயிரத்து 467 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற, மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, கணேசன், முகமது இலியாஸ், அருணன், அண்ணாதுரை, திருமலை உள்ளிட்ட காவல்துறையினர், நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 July 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...