/* */

ஆபத்தான நிலையில் குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

HIGHLIGHTS

ஆபத்தான நிலையில்   குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்
X
குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெரம்பலூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் அருகே அமைந்துள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் கட்டிடம் எப்போது பொதுமக்களின் உயிரை பறிக்கும் என்பது தெரியாத அளவிற்கு கட்டிடம் தரமற்ற வெடிப்புகளுடன் , நீர் கசிந்தும் பிளவு பெற்று தேசம் அடைந்த நிலையில் உள்ளது

இதனால் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் வரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் தேவைக்காக வட்டாட்சியர் ,துணை வட்டாட்சியர், சர்வேயர்,வட்ட வழங்கல் அலுவலர் , இ சேவை மையம் உள்ளிட்ட பல தகவல்களுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் கட்டிடத்தை பார்த்து அச்சப்படுகிறார்கள்.

கடந்த 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுமார் 22 ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்காத நிலையில் அந்தரத்தில் நிற்பதை பார்க்கும்போது ஏதோ கடமைக்காக கட்டிய கட்டிடம் போல் தோற்றமளிக்கிறது .கட்டிடம் புதிப்பித்தல் என்ற பெயரில் புது புது வண்ணங்கள் மட்டுமே அடித்து சாயம் பூசி உள்ளனர் என்பது தற்போது வெளிப்படையாக தெரியவருகிறது. ஒரு கட்டிடம் என்பது குறைந்தது நாற்பது அல்லது ஐம்பது ஆண்டாவது நிலைத்து இருக்க வேண்டும்.

வருவாய் வட்டாட்சியர் அலுவலக சுவரில் காரை பெயர்ந்து செங்கல் வெளியே தெரிகிறது.

ஆனால் குன்னத்தில் கட்டப்பட்ட வருவாய் வட்டாசியர் அலுவலக கட்டிடம் தரமற்று கட்டியதால் இந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. அரசு உடனே எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படுவதற்கு முன் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மற்ற வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இருக்கும் இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. ஆனால் வேப்பூர் ஒன்றியத்தில் மட்டும் அதற்கு எதிராக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒருபுறம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஒருபுறம் என சுமார் 15 கி.மீட்டர் தூரத்தில் தனித்தனியாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோள் சில ஆண்டுகளுக்கு முன் ஆலத்தூர் ஒன்றியத்திற்க்கும் வேப்பூர் ஒன்றியத்திற்கும் சேர்ந்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் குன்னத்தில் அமைக்கப்பட்டது. .அல்லிநகரம் கிராமம் முதல் அடைக்கம்பட்டி கிராமம் வரை இருந்தால் குன்னத்தை மையமாக வைத்து செயல்பட்டது ஏற்கத்தக்கது. இரண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக பொதுமக்களுக்கு வந்து செல்லும் வகையில் நடுவே வருவாய் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்தது. ஆனால் 2011ம் ஆண்டு அ.தி.மு..க அரசால் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு தனியாக மக்கள் தொகை அடிப்படையில் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு சென்று வர அவர்களுக்கு ஏதுவாக அமைந்தது.

தற்போது வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 47 வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் பயன் பெறும் வகையில் குன்னத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. ஆனால் 47 கிராம வருவாய் பொதுமக்களுக்கு நடு பகுதி என்று பார்த்தால் வேப்பூர் ஆகும். அங்கு வருவாய் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேப்பூரில் அமைந்தால் பொதுமக்கள் சென்று வர ஏதுவாக அமையும். தற்போது குன்னத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளதால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல கிராம மக்கள் அலைந்து திரிந்து செல்லுகின்றனர். இதனால் பொதுமக்கள் ஒரு நாள் முழுவது அலையும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்களும் கோரிக்கையான வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வேப்பூர் ஒன்றியத்தில் அமைந்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வரவும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வரவும் ,பதிவுத்துறை அலுவலகம் சென்று வரவும்,மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வரவும், வேளாண்மை துறைக்கு சென்று வரவும் ,கலை கல்லூரியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை பார்த்து வர என அனைத்தும் ஒரே நேரத்தில் அவர் அவர் தேவைகளுக்கு ஏற்ப சென்று வர ஏதுவாக இருக்கும்.

வேப்பூர் பகுதியில் அமைந்தால் ஏழை எளிய பொது மக்களுக்கு பயனாக இருக்கும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. எம். எல். ஏ.முயற்சியால் ஆலத்தூர் பகுதிக்கு வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டது. சாதாரண எம்.எல்.ஏ. அப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றினார். அதே போல் தற்போது தி.மு.க. ஆட்சியில் அந்த தொகுதி தி.மு.க.எம்.எல்.ஏ.வான அமைச்சரால் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வேப்பூர் பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டுவர தமிழக அரசும் அமைச்சரும் முயற்சி எடுப்பாரா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 4 Oct 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!