/* */

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சி.ஐ.டி.யு. சங்கத்தின் சார்பில் ஊதிய ஒப்பந்தம் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய சங்க பொருளாளர் சிங்கராயர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக துவக்க வேண்டும், குறைந்தபட்ச கூலி சட்டப்படி, 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும், பேட்டா, இன்சென்டிவ், பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்,

அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோர் பண பலன், 70 மாத டி.ஏ. நிலுவை, டி.ஏ. உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு தொடர் முழக்க மிட்டனர்.

பணி ஓய்வு பெற்றவார்கள் நல அமைப்பின் சார்பில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அகஸ்டின், துணைத் தலைவர் சிவானந்தம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் மத்திய சங்க நிர்வாகி நீலமேகம், மத்திய சங்க தலைவர் சந்தானம், மத்திய சங்க துணைத்தலைவர் நடராஜன். கிளைத் தலைவர் பக்ருதின் அலி அகமது, கிளைச் செயலாளர் அறிவழகன், மேலும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஞானசேகரன்,உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 23 Oct 2021 3:23 PM GMT

Related News