/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில்  193 மையங்களில்  கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம்.
X

பெரம்பலூர் மாவட்டடத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா  கொரோனா தடுப்பூசி நடைபெற்ற முகாமை பார்வையிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள், தனியார் கட்டிடங்கள் மக்கள் கூடும் இடங்களை கண்டு அப்பகுதிகளில் மொத்தம் 193 இடங்களில் சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுஇன்று செயல்படுத்தப்பட்டன,

இதனை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா துவக்கி வைத்தார்,

இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளும் விதமாக பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு இடங்களை தேர்வு செய்து மொத்தம் 193 இடங்களில் இன்று மாலை 7 மணி வரை கொரோன தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு 100 சதவீத தடுப்பூசி போட்ட மாவட்டமாகவும், கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றிட பொது மக்கள் தங்களை காத்து கொண்டு, கொரோனோ தொற்று நெறிமுறைகளைப் பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டுமென கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் குமரி மன்னன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் நகராட்சி பணியாளர்கள், ம ற்றும் பேரூராட்சி ,ஊராட்சிகளைச் சேர்ந்த பணியாளர்கள் பலர் தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...