/* */

குடிசை மாற்றுவாரிய வீடுகள் தரமற்று இருப்பதாக பயனாளிகள் புகார்: ஆட்சியர் ஆய்வு

ஆய்வில் குறைகள் இருப்பது கண்டறியப்பட் டதால், அதை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்

HIGHLIGHTS

குடிசை மாற்றுவாரிய  வீடுகள்  தரமற்று இருப்பதாக பயனாளிகள் புகார்: ஆட்சியர் ஆய்வு
X

குடியிருப்போர் அதிகாரிகளை வீடு வீடாக அழைத்துசென்று பார்வையிடுமாறு அழைத்து சென்று காண்பித்தனர்.

பெரம்பலூர் கவுள்பாளையம் அருகே குடிசைமாற்றுவாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 504 வீடுகள் கொண்ட குடியிருப்பு தரமற்று இருப்பதாக பயனாளிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

கைவைத்தாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்வதாகவும், தாங்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்திருந்தனர்.அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா குடிசைமாற்று வாரிய அதிகாரிகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார். திருச்சி கோட்ட குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அழகுபொன்னையா, மேற்பார்வை பொறியாளர் வசந்தகுமார் ஆகியோர் புகாருக்குள்ளான குடியிருப்பை ஆய்வுசெய்தனர்..அங்கு குடியிருப்போர் அதிகாரிகளை வீடு வீடாக அழைத்துசென்று காண்பித்தனர்.சேதமடைந்தும் காணப்பட்ட பகுதிகளையும் கைவைத்தாலே மணல் மணலாக உதிரும் பூச்சுகளைகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு குறிப்பெடுத்து சென்றனர்.இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் புகாருக்குள்ளான குடிசைமாற்றுவாரிய குடியிருப்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியாநேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். வீடுவீடாக சென்று பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்.குடியிருப்புவாசிகள் சிமெண்ட் பூச்சு உதிர்வது போன்ற குறைகளை தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா, குடியிருப்பு பகுதியிலேயே உள்ள பராமரிப்பு அலுவலக ஊழியர்கள் தினமும் பணியாற்றி எவ்வளவு நாட்கள் ஆனாலும் பழுதுகளை சீரமைத்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.குடிசைமாற்று அதிகாரிகள் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் தொடர்பு எண் ஆகியவற்றை குடியிருப்பு வாசிகளுக்கு தெரியும்படி எழுதிவைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: ஆய்வில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. உடனடியாக அவற்றை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குடிசைமாற்றுவாரிய அதிகாரி அழகுபொன்னையா , ஒப்பந்ததாரருக்கு கொடுக்க வேண்டிய கடைசி பில் தொகை 2 கோடி மேல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Updated On: 20 Aug 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!