/* */

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து வார்டுகளிலும் போட்டியிட பெரம்பலூர் தேமுதிக முடிவு

பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பேருந்தை அரசு இயக்க வேண்டும்

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து வார்டுகளிலும் போட்டியிட  பெரம்பலூர் தேமுதிக  முடிவு
X

பெரம்பலூர் நகரசெயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  பேசிய தேமுதிக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் தங்கமணி கலந்துகொண்டு பேசி

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் பெரம்பலூர் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 12ஆம் தேதி இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் நகர கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேமுதிக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் தங்கமணி கலந்துகொண்டு பேசியதாவது:

வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும், கிளைக் கழகங்கள் அனைத்திலும் அனைத்து பகுதிகளிலும் தேமுதிக கொடி கம்பங்களை நட்டு கொடியேற்ற வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பேருந்து இயக்க வேண்டியும், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்கள்வீரர்கள் இறப்புக்கும் மேலும் பெரம்பலூரில் தேமுதிக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர் இறப்புக்கும் இரங்கல் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், முன்னாள் மாவட்ட தொழிற்சங்க துணைதலைவர் இளையராஜா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், சுடர் செல்வன், சங்கர், மேகலாரெங்கராஜ், வேப்பந்தட்டை ஒன்றிய கழக செயலாளர் ஐயப்பன், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் தவசிஅன்பழகன், வேப்பூர் ஒன்றிய கழகச் செயலாளர் மலர்மன்னன், ஆலத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சாமிதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன், நகர மகளிர் அணி அவைத்தலைவர் நித்தியா உள்ளிட்ட, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  7. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  8. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  9. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  10. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்