/* */

பெரம்பலூரில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு : 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்

பெரம்பலூரில் ஊரடங்கு விதிமீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமையிலான அதிகாரிகள் சீல்வைத்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு :  2 கடைகளுக்கு  நகராட்சி அதிகாரிகள் சீல்
X

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல் வைத்த பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள்.

பெரம்பலூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காய்கறி மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இன்று முதல் மளிகை கடைகள் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் அந்த உத்தரவுப் படி செயல்பட வேண்டுமென்று பெரம்பலூர் மாவட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் இன்று காலை பெரம்பலூர் நகர்ப்பகுதி கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு ஜவுளிக்கடையும் மற்றும் டெய்லர் கடையும் திறந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

இதையடுத்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தலைமையிலான அதிகாரிகள் அந்த இரண்டு கடைகளையும் பூட்டி சீல்வைத்தனர். அத்துடன் ஒரு கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.முழு ஊரடங்கிற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்ட நகராட்சி அதிகாரிகள் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Updated On: 22 Jun 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!