/* */

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு 8 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெறுகிறது. புனித ஸ்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி வெறிச்சோடியது.

HIGHLIGHTS

தமிழக அரசின் உத்தரவை அடுத்து நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வாஞ்சூர் கானூர் உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் காவல் துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான மளிகை காய்கறி மருந்தகம் உள்ளிட்டவைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்கா பக்தர்களின் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுவதுடன், வழிபாட்டிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதே போல மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி பேராலயம் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுவதுடன் கடற்கரை, கடைத்தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளை தவிர அனாவசியமாக ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.

Updated On: 10 May 2021 1:45 PM GMT

Related News