/* */

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பாய்மரம் ஏற்றும் நிகழ்வு

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பாய்மரம் ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பாய்மரம் ஏற்றும் நிகழ்வு
X

கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்கா மினார் மின்னொளியில் மிளிர்கிறது.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465 -ஆம் ஆண்டு கந்தூரி விழா வருகின்ற 04 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும், நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.


பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று நாகூர் ஆண்டவரை வேண்டிக்கொண்டனர். நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான 04 ஆம் தேதி கொடியேற்ற வைபவமும், அதனைத் தொடர்ந்து வரும் 13, ஆம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

Updated On: 2 Jan 2022 4:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!